ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் செயலிகளை தரவிறக்கம் செய்ய முடியவில்லையா? சரி செய்ய சூப்பர் டிப்ஸ்


ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் போதுமான மெமரி மற்றும் சீரான இணைய வசதி இருந்தும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை டவுன்லோடு செய்ய முடியாமல் போவது பலரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை தான். இதுபோன்ற சூழ்நிலைகளில் செயலிகளை டவுன்லோடு செய்ய முடியாமல் போவது மற்றும் பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை அப்டேட் செய்ய முடியாமல் போவதற்கான காரணங்களும் அதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பதையும் தொடர்ந்து பார்ப்போம்.

முதலில் கவனிக்க வேண்டியவை: பிரச்சனைகளை ஆய்வு செய்ய துவங்கும் முன் ஸ்மார்ட்போனில் சீரான இணைய வசதி இருப்பதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்ய வேண்டும். சில சமயங்களில் இணைய வசதியில்லாததும், கூகுள் பிளே ஸ்டோர் இயங்காமல் போவதற்கு காரணமாக இருக்கலாம். மற்றொரு முக்கிய விஷயம் அதிக மெமரி கொண்ட செயலிகள் வைபை கனெக்டிவிட்டியில் டவுன்லோடு ஆக காத்திருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் Download Over WiFi ஆப்ஷன் செயல்படுத்தப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டு அவ்வாறு இருப்பின் அதனை ஆஃப் செய்ய வேண்டும். மேலே கொடுக்கப்பட்டு இருக்கும் வழிமுறைகளை ஆய்வு செய்த பின்பும், செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்ய முடியவில்லை எனில், கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் வழிமுறைகளை பின்பற்றலாம்.

கேச்சி
 பிளே ஸ்டோரின் கேச்சி டேட்டாவை சரி செய்து அவற்றை அழிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது பிரச்சனை சரியாக வாய்ப்பு இருக்கிறது. 

1 - ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் செல்ல வேண்டும் 

2 - இனி அப்ளிகேஷன்ஸ் அல்லது ஆப்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யவும் 

3 - கூகுள் பிளே ஸ்டோர் செயலியை தேர்வு செய்ய வேண்டும் 

4 - ஸ்டோரேஜ் ஆப்ஷனில் க்ளியர் கேச்சி ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் 

5 - இனி க்ளியர் டேட்டா ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும் 

6 - இவ்வாறு செய்ததும், பிளே ஸ்டோர் சென்று செயலிகளை டவுன்லோடு செய்ய முயற்சிக்கலாம்

இவைதவிர மேலும் ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். சிலசமயங்களில், பயனர்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை செட்டப் செய்தவுடன் செயலியை பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்ய முற்படுவர். இதுபோன்ற சூழ்நிலைகளில் கூகுள் அக்கவுண்ட் சின்க் மோடில் இருந்தாலோ அல்லது அக்கவுண்ட்டுடன் தொடர்பு கொண்டிருக்கும் செயலிகள் டவுன்லோடு ஆகும் போது பிளே ஸ்டோரில் காத்திருப்பதை உணர்த்தும் ஐகான் தோன்றலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் டவுன்லோடு அல்லது சின்க் நிறைவுறும் வரை காத்திருந்து செயலியை டவுன்லோடு செய்ய முயற்சிக்க வேண்டும்.

குழந்தைகளுக்குப் பாடம் எடுக்கும் "எலிசா" டீச்சர்.! இவங்க வெறும் டீச்சர் இல்ல "ரோபோட் டீச்சர்".!

பின்லாந்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் ரோபோட்கள் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றன. "எலிசா" என்று அழைக்கப்படும் இந்த ரோபோட் பள்ளி மாணவர்களுக்கு மொழிப் பாடங்களை மிகத் துல்லியமாகக் கற்பிக்கிறது.

இந்த எலிசா ரோபோட்டினால் சுமார் 23 மொழிகளைப் புரிந்துகொள்ள முடியுமாம். அதேபோல் பேசவும் முடியும் என்று இதனை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் தற்சமயம் இந்த எலிசா ரோபோட், ஆங்கிலம், ஜெர்மனி மற்றும் பின்னிஷ் என்று வெறும் 3 மொழிகளில் மட்டுமே செயல்படும்படி வெளிவந்துள்ளது.

குழந்தைகள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் எலிசா ரோபோட் பொறுப்பாகவும், அழகாகவும் பதில் அளிக்கிறது. குழந்தைகளின் உணர்வுகள் உணர்ந்து நடந்துகொள்ளும் படி இந்த ரோபோட் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக எலிசா ரோபோட்டிற்கு கேமரா மற்றும் பிரத்தியேக சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்குப் பாடம் எடுப்பது மட்டுமின்றி, அவர்களுக்குக் கதைகள் சொல்லுவது, நடனம் ஆடுவது, பாடுவது எனப் பல வித்தைகளை தன்னுள் வைத்துள்ளது. மருத்துவம், விவசாயம் எனப் பல துறைகளில் ரோபோட்களின் வருகை அதிகரித்துள்ளது. தற்பொழுது கல்வித் துறையிலும் ரோபோட்கள் கால் பதித்திருப்பது எதிர்காலத்திற்கான அடுத்தபடி முயற்சி என்றே கூறவேண்டும்.

பாஜக-பீப் ஜனதா பார்ட்டி ஆனது: இணையத்தில் ஹேர்கர்கள் அட்டூழியம்.!

பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு மாட்டிறைச்சி படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா பார்ட்டி என்று அழைக்கப்பட்டதை பீப் ஜனதா பார்ட்டி என்று ஹேக்கர்கள் இணையத்தை மாற்றியுள்ளனர். 

மேலும் இணைய பக்கம் முழுக்கவும் மாட்டிறைச்சி படங்கள் பதிவு செய்துள்ளனர், மாட்டிறைச்சி கட்சி, மாட்டிறைச்சி வரலாறு என்றும் மாற்றப்பட்டுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பாஜக இதை சரி செய்யும் பணியில் இறங்கியுள்ளது.

2ம்முறையாக பதிவேற்றார் மோடி: தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. பாஜ கூட்டணி சுமார் 350 இடங்களை பிடித்துள்ளது.

இதன் மூலம் நாட்டின் 2வது பிரதமராக மோடி பதிவேற்றுள்ளார். தற்போது மத்தியில் பாஜக தலைமையிலான அரசு மீண்டும் மத்தியில் பொறுப்பேற்றுள்ளது.

மோடி மற்றும் பாஜ மீது வெறுப்பு: பாஜக அதிக இடங்களில் நடந்த முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பாமையாக சுமார் 303 இடங்களில் பிடித்து ஆட்சி அமைத்துள்ளது. இதனால் மற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள் பாஜக மீது அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவும், வெறுப்பு காரணமாகவும் ஒரு சில செயல்களை அரங்கேற்றி வருகின்றனர். சமூக வலைதளங்களில் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

பாஜ இணையதளம் ஹேக்: இந்நிலையில் மோடி தலைமையிலான பாஜக மத்தியில் மீண்டும் பொறுப்பு பேற்றுள்ளது. இதனால் ஆந்திரமடைந்த சிலர், ஹேக்கர்கள் மூலம் பாஜ இணையதளத்தை ஹேக் செய்து அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் செயல்படும் இணையதளத்தை முற்றிலுமாக ஹேக் செய்யப்பட்டுள்ளது. இணையம் ஹேக் செய்யப்பட்டுள்ளதை கண்டு பாஜகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பீப் ஜனதா பார்ட்டி: ஹேர்கள் பாஜ இணையதளத்தை ஹேக் செய்து பாரதிய ஜனதா பார்ட்டி ( Bharatiya Janata Party) என்பதற்கு பதிலாக பீப் ஜனதா பார்ட்டி ( Beef Janata Party) என்று பெயரையும் மாற்றி பதிவேற்றம் செய்துள்ளனர்.

மாட்டிறைச்சி புகைப்படங்கள்: இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி புகைப்படத்தால் ஹேர்கள் நிரப்பியுள்ளனர். பாஜவுக்கு மாட்டிறைச்சி கட்சி, மாட்டிறைச்சி வரலாறு என்று அனைத்து தகவல்களையும் மாற்றியுள்ளனர்.

ரூ.3699-விலையில் டிடெல் நிறுவனத்தின் குட்டி எல்இடி டிவி அறிமுகம்.!

டிடெல் நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டிவி, மின்சாதனங்கள் உள்பட பல்வேறு பொருட்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் 17-இன்ச் கொண்ட குட்டி டிவி மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது இந்த அட்டகாசமான நிறுவனம். கண்டிப்பாக இந்த டிவி மாடல் இந்தியா முழுவதும் அதிக அளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதற்குதகுந்த தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

இந்த சிறிய டிவி மாடல் பெயர் என்னவென்றால் டி1 ஸ்டார் எல்இடி டிவி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

17-இன்ச் டிஸ்பிளே இந்த எல்இடி டிவி மாடல் பொதுவாக 17-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்ப 1,920 X 1,080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியின் அடிப்படையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக சில ஆன்லைன் தளங்களில் இந்த டிவி மாடல் கிடைக்கிறது.

10வாட் ஸ்பீக்கர்கள் மேலும் 10வாட் ஸ்பீக்கர்கள் கொண்டு இந்த டி1 ஸ்டார் எல்இடி டிவி மாடல் வெளிவந்துள்ளதால் சிறந்த ஆடியோ மற்றும் திரை அனுபவம் கொடுக்கும் வகையில் உள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்த சாதனத்தின் எடை குறைவாக இருப்பதால் அனைத்து இடங்களிலும் வைத்துப் பார்க்க முடியும்.

இணைப்பு ஆதரவுகள்: எச்டிஎம்ஐபோர்ட், யுஎஸ்பி போர்ட், விஜிஏ இன்புட், ஆடியோ அவுட்புட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். பெரிய ஸ்மார்ட் டிவிகள் கொடுக்கும் வசதியை இந்த சிறிய எல்இடி டிவி மாடல் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்ஆப் செயலியில் கிடைக்கிறது புதிய வசதி: ட்ரை பண்ணுங்க மக்களே.!


வாட்ஸ்ஆப் நிறவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் விரைவில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. தற்சமயம் வாட்ஸ்ஆப் செயலியில் கான்சிக்யூட்டிவ் வாய்ஸ் மெசேஜஸ் (Consecutive Voice Messages) என்ற பிளேபேக் அம்சம் ஆண்ட்ராய்டு அப்டேட் மூலம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

இருமாதங்கள் சோதனைக்கு பின்பு.. இதற்க்குமுன்பு கடந்த மார்ச் மாதம் வாட்ஸ்ஆப் பீட்டா 2.19.86 பதிப்பில் இந்த அம்சம் வழங்கப்பட்டது, பின்பு இருமாதங்கள் சோதனைக்கு பின்பு இந்த புதிய வசதி அனைவருக்கும் வழஙப்பட்டு இருக்கிறது. குறிப்பாக வாட்ஸ்ஆப் செயலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் இந்த அம்சம் மூலம் வாய்ஸ் மெசேஸஜ்களை தொடர்சியாக கேட்க முடியும்.

புதிய அப்டேட் இந்த செயலியில் இப்போது வாய்ஸ் ய்ஸ் மெசேஜ்களை ஒவ்வொன்றாகவே கேட்க முடியும். குறிப்பாக புதிய அப்டேட் மூலம் வாய்ஸ் மெசேஜ்களில் ஒரே கிளிக் செய்து இடைவெளியின்றி கேட்க முடியும். பின்பு இதனுடன் வாட்ஸ்ஆப் அப்டேட்டில் CVE-2019-3568பிழையும் சரி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பைவேர் தாக்குதல் அன்மையில் வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்பைவேர் தாக்குதல் கண்டறியப்பட்டது, இந்த ஸ்பைவேர் பொதுவாக பயனரின் மொபைலில் வாய்ஸ் கால் மூலம் விவரங்களை சேகரித்தது. பின்பு வாய்ஸ்கால் அழைப்பை பயனர் ஏற்றபலும் ஏற்கவில்லை என்றாலும் பயனர் விவரங்களை இந்த ஸ்பைவேர் சேகரித்தது உறுதி செய்யப்பட்டது.

மின்னஞ்சல் ஸ்பைவேர் பொறுத்தவரை பயனர் ஸ்மார்ட்போனின் குறுந்தகவல்கள், ஜிபிஎஸ், லோகேஷன் மின்னஞ்சல் போன்ற பல்வேறு விவரங்களை சேகரித்து வந்தது. கடந்த மாதம் கண்டறியப்பட்ட பிழை ஏற்கனவே முந்தைய அப்டேட் மூலம் சரி செய்யப்பட்டது.

விளம்பரங்கள் தோன்றும் மேலும் 2020-ம் ஆண்டு முதல் வாட்ஸ்ஆப் செயலியில் விளம்பரங்கள் தோன்றும் என பேஸ்புக் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதுபற்றிய அறிவிப்பு நெதர்லாந்தில் நடைபெற்ற பேஸ்புக் வருடாந்திர விளம்பர பொதுக்கூட்டத்தில் வெளியாகி இருக்கிறது.மேலும் வாட்ஸ் செயலியில் எங்கு விளம்பரங்கள் தோன்றும் என்ற விவரங்கள் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

டிவிட்டரில் வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் குறிப்பாக டிவிட்டரில் வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் பேஸ்புக் தனது வாடிக்கையாளர்கள் வியாபாரங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என நினைக்கிறது. இந்த புதிய அம்சம் வாட்ஸ்ஆப்பில் கிளிக் செய்யப்படும் விளம்பரங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது திட்டம் இந்நிறுவனத்தின் இரண்டாவது திட்டம் இன்ஸ்டாகிராம் சார்ந்து ஆகும், அதன்படி வாட்ஸ்ஆப் (ஐ.ஜி) கிளிக் செய்யப்படும் விளம்பரங்கள் என குறிப்பிடப்படுகிறது. மூன்றாவது திட்டத்தில் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்களை தோன்ற செய்வது ஆகும், இது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் விளம்பரங்களை தோன்றுவதை போன்று செயல்படும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது.

சியோமி 32இன்ச் டிவி ரூ.12,499: எம்ஐ-க்கு விலையை குறைந்த பிளிப்கார்ட்.!



சியோமியின் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.12,499க்கு விலையை அதிரடியாக குறைத்து அறிவித்துள்ளது பிளிப்கார்ட் நிறுவனம். மேலும், சியோமியின் அனைத்து மாடல் ஸ்மார்ட் டிவிகளுக்கும் அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது உலகப் கோப்பை நடப்பதையொட்டி இந்த ஆப்பரை பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், 30 நாட்களுக்குள் எக்ஸ்சேஞ் செய்து கொள்ளும் வசதியும், பிளிப்கார்ட்டில் வாங்கும் போது 90% கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



உலகப் கோப்பை கிரிக்கெட் போட்டி: 



தற்போது உலகப் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்கியுள்ளது. ஜூலை 14-ந்தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள மொத்தம் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடக்கின்றது. ஆசிய துணைக் கண்டத்து ரசிகர்கள் இரவு 11 மணிக்குள் கிரிக்கெட் போட்டி ஆட்டங்களை டி.வி.யில் பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்று வரை எந்த பகல்-இரவு ஆட்டங்களிலும் விளையாடாத வகையில் போட்டி அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் ஆப்பர்: 



இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சியோமியின் எம்ஐ டிவிகள் அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று முதல் விற்பனை துவங்கியுள்ளது. இன்று மட்டுமே கடைசி நாளாகும். மேலும், இதில் எக்சேஞ் ஆப்பரும் அறிவிக்கப்பட்டுள்ளது. 90% சதவீதம் எக்ஸ்சேஞ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 30 நாட்களுக்குள் டிவியை பரிமாற்றிக் கொள்ளும் திட்டத்தை அறிவித்துள்ளது பிளிப்கார்ட்.

எம்ஐ எல்இடி 4ஏ ஸ்மார்ட் டிவி (32இன்ச்): 



32இன்ச் திரையுள்ள டிவி ரூ.14,499 ஆகும். தற்போது விலை குறைக்கப்பட்டு ரூ.12,499விற்பனை செய்யப்படுகின்றது.

எம்ஐ 4ஏ புரோ ஸ்மார்ட் டிவி (43 இன்ச்) : 



இந்த 43இன்ச் டிஸ்பிளே டிவி விலை ரூ.25,999 ஆகும். தற்போது ரூ,22,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

எம்ஐ4ஏ புரோ ஸ்மார்ட் டிவி (49 இன்ச்): 



இந்த 49 இன்ச் டிவி விலை ரூ.32,999 ஆகும். இதன் விலை தற்போது 29,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

எம்ஐ 4எக்ஸ் புரோ ஸ்மார்ட் டிவி (55 இன்ச்): 



இந்த 55 இன் 4 கே டிவியின் விலை ரூ.49,999 ஆகும். இதன் விலை தற்போது 10 ஆயிரம் குறைக்கப்பட்டு, 39,999 விற்பனை செய்யப்படுகின்றது.

எம்ஐ 4 புரோ ஆன்ட்ராய்டு டிவி: 



55 இன்ச் அளவுள்ள எம்ஐ 4 புரோ ஆன்ட்ராய்டு டிவி 4கே தொழில்நுட்பத்துடன் உள்ளது. இதன் விலை ரூ.54,999. ஆகும் இதை தற்போது ரூ.47,999க்கு வாங்கலாம்.


பப்ஜி விளையாடி மாரடைப்பால் உயிரிழந்த சிறுவன்.! கதறும் பெற்றோர்.!



பப்ஜி உலகம் முழுதும் அனைவராலும் பெரிதும் விளையப்பட்டுக்கொண்டிருக்கும் கேம் என்பது அனைவர்க்கும் தெரியும். இண்டோர் பகுதியைச் சேர்ந்த 16 வயது வாலிபர் தொடர்ச்சியாக 6 மணி நேரம் பப்ஜி கேம் விளையாடித் தோற்ற அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்.

பப்ஜி பற்றி ஆய்வுகள் என்ன தெரிவிக்கிறது தெரியுமா? உலகம் முழுதும் பலரும் இந்த பப்ஜி கேம்மை விரும்பி விளையாடி வருகின்றனர். பலரும் இந்த கேமிற்கு அடிமையாகி விட்டதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது. தொடர்ச்சியாக இந்த கேம்மை விளையாடும் பலருக்கும் மனரீதியான சோர்வும், குழப்பமும், விரக்தியும் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஃபுர்கான் குரேஷி மருத்துவர்கள் முன்பே தெரிவித்தது போல் சிறுவர்களுக்கு இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடம் என்று சொன்னது அனைத்தையும் உறுதிப்படுத்தும் விதமாக இப்பொழுது ஒரு உண்மை சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஃபுர்கான் குரேஷி என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், தொடர்ச்சியாக 6 மணிநேரத்திற்கு மேல் பப்ஜி கேம்மை விளையாடி மரணம் அடைந்திருக்கிறார்.

இறுதியாய் மகனின் அலறலைக் கேட்ட பெற்றோர் தொடர்ச்சியாக பப்ஜி விளையாடி, ஒருமுறை கூட வெற்றிபெற முடியாத காரணத்தினால் மனவிரக்தியில் சத்தமிட்டுக் கதறி அழுதுள்ளான். இந்த சம்பவம் நடந்த பொழுது ஃபுர்கான் குரேஷியின் தகப்பனாரும் அருகிலிருந்திருக்கிறார். மகனின் அலறலைக் கேட்டு வீட்டிலிருந்த அனைவரும் ஃபுர்கான் குரேஷியின் அருகில் வந்துள்ளனர்.

மயங்கி கீழே விழுந்த குரேஷி விரக்தியில் கதறி அழுத்த ஃபுர்கான் குரேஷி, சிறிது நேரத்திலேயே மயங்கி கீழே விழுந்திருக்கிறார். குரேஷியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவரை எழுப்ப முயன்றுள்ளனர். பேச்சு மொச்சு எதுவுமில்லாமல் குரேஷி இருப்பதாய் கண்டு விரைவாக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர்.

மருத்துவர்களின் முயற்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லலும் பொழுதே குரேஷி இறந்திருக்கிறார். மருத்துவர்கள் குரேஷியைச் சோதித்த பொழுது அவருக்கு நாடித்துடிப்பு இல்லாமல் இருந்திருக்கிறது. நாடித்துடிப்பு இல்லாத போதும் மருத்துவர்கள் குரேஷியைக் காப்பாற்ற முயன்றிருக்கின்றனர், ஆனால் மருத்துவர்களின் முயற்சிகள் பயனளிக்கவில்லை.

மாரடைப்பு ஏற்பட காரணம் இதுதான் குரேஷியின் உடலைச் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் கூறியதாவது "சிறுவனின் இதயம் வலிமையாகத் தான் இருந்திருக்கிறது. கேம் விளையாடிய உற்சாகத்தில் அதிகமாக அட்ரினலின் சுரந்திருக்க கூடும், இவர் கத்தி கூச்சலிடத்தில் இதயத் துடிப்பு அதிகம் ஆகி இரத்த ஓட்டம் அதிகரித்து இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கும்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

18 மணி நேரம் ஓய்வு இல்லாமல் பப்ஜி குரேஷி ஒரு நீச்சல் வீரர் என்று அவரின் பெற்றோர் தெரிவித்திருக்கின்றனர். ஃபுர்கான் குரேஷி சில நேரங்களைத் தொடர்ச்சியாக 18 மணி நேரம் ஓய்வு இல்லாமல் பப்ஜி கேம்மை விளைந்து வந்ததாகவும் அவரின் சகோதரர் தெரிவித்திருக்கிறார். விளையாட்டால் இவர் உயிரிழந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


ரூ.40லட்சம் மதிப்புள்ள ஐபோன்கள் திருட்டு: காட்டிக்கொடுத்த சிசிடிவி.!


அகமதாபாத் போடக்தேவ் பகுதியில், ஐ வெனுஸ் மொபைல் ஸ்டோர் செயல்பட்டு வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென இரவு நேரத்தில் நுழைந்த கொள்ளயைர்கள் 35 ஐபோன்கள், செல்போன் உதிரிபாகங்கள் மற்றும் பணத்தையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றுவிட்டனர்.

கடையில் வைத்திருந்த சிசிடிவி கேமரா மூலம் கொள்ளையர்களின் முகம் பதிவாகியுள்ளது. இதை வைத்து போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.

கொள்ளையில் 7 பேர்: 

மொபைல் ஸ்டோரில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது 7 பேர் என தெரியவந்துள்ளது. குறுகிய சந்து வழியே நுழைந்த அவர்கள் கொள்ளையை வெற்றிகரமாக அரங்கேற்றியதும். ஸ்டோரில் இருந்த லாக்கரை உடைத்து பொருட்களை கொள்ளையடிப்பதும் தெரியவந்துள்ளது.

நள்ளிரவில் துணிகர கொள்ளை: 

கடந்த சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் ஹிதேஷ் மற்றும் ரூன்கா மொபைல் ஸ்டோரை பூட்டி விட்டு சென்றுள்ளனர். அவர்கள் ஞாயிறன்று காலை 10.30மணிக்கு கடையை திறக்கும் போது, கொள்ளையடிக்கப்பட்டது குறித்து கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சிசிடிவி கேமரா காட்சி: 

இதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, அந்த 7 கொள்ளையர்களும் சேர்ந்து ஸ்டோருக்கு நுழைந்ததும். அங்கு இருந்த லாக்கரை உடைத்தும், 35 ஐபோன்களையும், ரூ.1.5 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. தற்போது, திருடர்களிடம் இருந்து 8 ஐபோன்கள் மட்டும் எஞ்சியுள்ளது.

3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு: 

கடை மேலாளர் அளித்த புகாரின் பேரில், வஸ்தாரபூர் போலீஸ் நிலைய எஸ்ஐ எம்ஏ ஜடேஜா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். மேலும், சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக கொண்டு இந்திய தண்டனை சட்டம் 454, 457, 380 பிரிவுகளில் வழக்கு விசாரணை நடந்து வருகின்றது. விரைவில் கொள்ளையர்களை பிடித்து விடுவோம் என்று எஸ்ஐ ஜடேஜா கூறியுள்ளார்.