Science லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Science லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாயில் களிமண் கணிமங்கள்: கண்டறிந்த நாசா கியூரியாசிட்டி விண்கலம்.!


நாசா தொடரந்து செவ்வாய் கிரகத்தில் பல்Nவுறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகிறது, இந்நிலையில் நாசாவின் கியூரியாசிட்டி  விண்கலம் கடந்த மே 12-ம் தேதி, மவுண்ட் ஷார்ப் என்ற பகுதியில் அபர்லேடி கில்மேரி என பெயரிடப்பட்டுள்ள இரு இடங்களில் கியூரியாசிட்டி துளையிட்டுள்ளது.









செல்பீ படமாக பின்பு இதை செல்பீ படமாக எடுத்தும் கியூரியாசிட்டி அனுப்பியுள்ளது, அது துளையிட்ட இடங்கிளில் களிமண் கனிமங்கள் அதிக இருந்துள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உயரிகளுக்கு ஆதாரமான நீர் இருக்கும் இடங்களிலேயே களிமண் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாயில் உயிரினங்கள் அந்தவகையில் பல நூறுகோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருந்திருக்கக் கூடுமா என்பதைக் கண்டறிவதற்காக மவுண்ட் ஷார்ப் பகுதியில் கியூரியாசிட்டி ஆய்வு மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

விஞ்ஞானிகள் நிலவு மற்றும் செவ்வாயில் மனிதர்களைத் தங்கவைப்பதற்கான பல புதிய திட்டங்களை நாசா மேற்கொண்டு வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. உலக நாடுகள் பலவும் இந்த முயற்சியில் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் செவ்வாயில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்திய கூறு மிகக் குறைவாக உள்ளதென்று விஞ்ஞானிகள் தெரிவித்து வந்தனர்

15 புகைப்படங்களை செவ்வாயிலிருந்து அனுப்பியுள்ளது அதனைப் பொய் என்று நிரூபிக்கப் பல விஞ்ஞானிகளும் பல முன்னனி நாடுகளும் முயன்று வருகின்றது. இந்நிலையில் தற்பொழுது அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் வகையில் நாசாவின் கியூரியாசிட்டி செயற்கைக்கோள் செவ்வாயில் உயிர்கள் உள்ளதென்று 15 புகைப்படங்களை செவ்வாயிலிருந்து அனுப்பியுள்ளது.

வேற்று உயிர் படிமங்கள் செவ்வாயின் மேற்பரப்பிலிருந்து, இந்த கியூரியாசிட்டி ரோவர் செயற்கைக்கோள் செவ்வாய்க் கிரகத்தைப் படம் பிடித்துள்ளது. கியூரியாசிட்டி ரோவர் படம்பிடித்த 15 புகைப்படத்தில் செவ்வாயின் மேற்பரப்பில் வேற்று உயிர் படிமங்கள் வாழ்வது தெரியவந்துள்ளது.

நீங்கள் கவலைப் படவேண்டாம் நீங்கள் கவலைப் படவேண்டாம் இவை ஏலியன் உயிரினங்கள் இல்லை, முழுதாய் உருவான உயிரினமும் இல்லை, புகைப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உயிர் படிமங்கள் புஞ்சை மற்றும் பாசி மாதிரியை சேர்ந்தது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிர் நிலைகள் வாழ்வதற்கான சாத்தியக் கூறு கண்டுபிடிப்பு முன்பு செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் உயிர்கள் வாழ்விடம் வசிக்க முடியாதது என்று நம்பப்பட்டது, ஆனால் தற்பொழுது அறியப்பட்டுள்ள தகவலின்படி செவ்வாயின் மேற்பரப்பிற்குக் கீழே உயிர் நிலைகள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் நன்றாக இருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.

அதிகப்படியான வளர்ச்சியை அடைந்து வரும் உயிர் படிமம் இந்த உயிர் படிமங்கள் காளான்கள், தண்டுகள் மற்றும் ஸ்போர்களைப் போல் தோற்றமளிக்கிறது. இதுவரை சுமார் 15 உயிர் மாதிரிகளை நாசா படம்பிடித்துள்ளது. இதில் அதிகப்படியான சுவாரசியம் என்னவென்றால் இந்த உயிர் படிமங்கள் மூன்று நாட்களில் அதிகப்படியான வளர்ச்சியை அடைந்து, இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பது தான்.

நாசா பலதரப்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நாசா வளர்ந்து வரும் இந்த உயிர் படிமங்களை இன்னும் ஆராய்ந்து பார்க்க நாசா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இவை வேற்று என்ற பலதரப்பட்ட ஆராய்ச்சிகளை உரிய விஞ்ஞானிகளின் குழுவுடன் ஆராயத் திட்டமிட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.


நீரினால் தோல் சுருக்கம் அடைவது ஏன்?

தோல் சுருக்கம் ஏற்படுவது, நீரில் ஊறி விடுவதால் தோலில் ஏற்படும் வீக்கம் என்று தான் நீண்ட காலமாக மக்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
இப்போது ஆராய்ச்சியாளர்கள் தோல் சுருக்கம் என்பது நரம்பு மண்டலத்தின் எதிர்வினை செயல் என்று கண்டறிந்து இருக்கிறார்கள்.
அதாவது, ஈரத்தினால் பொருட்களை தூக்குவதில் ஏற்படும் சிரமம், வழுக்கி விழும் சாத்தியங்கள் அதிகம். இதனால் மூளை நமது தோலுக்கு நரம்பு மண்டலத்தின் மூலமாக சுருக்கத்தினை ஏற்படுத்த கட்டளையை அனுப்பும்.
இதனால், சுருக்கமான விரல்களால் ஈரமான பொருட்களைத் தூக்குவது எளிது. உங்கள் விரல்களில் உள்ள சுருக்கங்கள் உங்களுக்கு அதிக பிடியைக் கொடுக்கும் தன்மையைப் பெறுகிறது.
மேலும் வாசிக்க : http://www.bbc.com/future/story/...

மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்!



NASA முதன்முறையாக ஒரு பெண் உட்பட சில மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் விண்கலத்தை வடிவமைப்பதில் உதவுவதற்கு கிட்டத்தட்ட ஒரு டஜன் நிறுவனங்களை தேர்ந்தெடுத்துள்ளது.

அடுத்த ஆறு மாதங்கள் முழுவதும்,ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் துறையில் மிகப்பெரிய நிறுவனங்கள் உள்பட நாசா தேர்ந்தெடுத்துள்ள பங்குதாரர்கள், 2024ம் ஆண்டு வரவிருக்கும் ஆர்டிமிஸ் மிஷனின் பல்வேறு பாகங்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.

'கேட்வே' 

இந்த மிஷனின் ஒரு பகுதியாக, சந்திரனை ஆராய்வதற்காக விண்வெளி வீரர்களுக்கு ஒரு வழிவகையாக செயல்படும் 'கேட்வே' என்றழைக்கப்படும் ஒரு விண்வெளி நிலையத்தை கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளது நாசா. இந்த விண்வெளி நிலையத்தின் கட்டுமானப்பணி அடுத்த சில ஆண்டுகளில் தொடங்கி, முழுமையான கட்டமைக்கப்பட்ட பின்னர் சந்திரனின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.

நாசா 

நாசா தேர்ந்தெடுத்துள்ள நிறுவனங்கள், ஆர்டிமிஸ் மிஷனின் மூன்று வெவ்வேறு பாகங்களில் கவனம் செலுத்தும். விண்வெளி வீரர்களை கேட்வே மற்றும் சந்திர சுற்றுப்பாதைக்கு இடையில் மாற்ற உதவும் டிரான்ஸ்பர் எலமெண்ட், அதேபோல் நிலவில் இருந்து பூமிக்கு வரவும், இங்கிருந்து நிலவிற்கு செல்ல உதவும் அஸ்சென்ட் மற்றும் டிஸ்சென்ட் எலமெண்ட்களும் இதில் அடக்கம்.

தனியார் துறை 

நாசா மற்றும் தனியார் துறை இடையேயான இந்த ஒத்துழைப்பு நாசாவின் விண்வெளி ஆராய்ச்சியில் மட்டும் புதிய மைல்கல்லாக இருக்காமல், அந்நிறுவனம் செயல்படும் முறையிலும் இருக்கும்.


பாரம்பரிய முறைகளில் சவால் விடுக்கிறோம் 

"சந்திரனுக்கு திரும்புவதை விரைவுபடுத்துவதற்காக, எங்கள் வணிகத்தைச் செய்வதற்கான பாரம்பரிய முறைகளில் சவால் விடுக்கிறோம். வன்பொருள் மேம்பாடு, செயல்பாடுகள், கொள்முதல், கூட்டு நிறுவனம் ஆகிய அனைத்தையும் மாற்றியமைப்போம்" என்கிறார் நாசாவின் தலைமையகத்தில் ஹீயூமன் லூனார் எக்ஸ்ப்ளோரேசன் ப்ரோகிராம் இயக்குனர் மார்ஷெல் ஸ்மித்.

20 சதவிகிதம் நிதியளிக்க வேண்டும் 

"எங்கள் குழு விரைவில் மீண்டும் நிலவிற்கு திரும்புவதற்கு உற்சாகமாக உள்ளது. மற்றும் மனிதர்கள் தரையிறங்கும் அமைப்புகளைப் ஆராய எங்கள் பொதுத்துறை / தனியார் கூட்டணி அந்த செயல்முறையில் ஒரு முக்கியமான படியாகும் " எனவும் ஸ்மித் கூறினார். அனைத்து நிறுவனங்களும் $ 45 மில்லியனுக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியாக செலவினத்தில் குறைந்தபட்சம் 20 சதவிகிதம் நிதியளிக்க வேண்டும். இதன்மூலம் எதிர்கால விண்வெளி பயணங்களில் வரி செலுத்துவோரின் பணம் குறைவாக செலவழிக்கப்படும் என நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நாசா தேர்ந்தெடுத்த நிறுவனங்களின் முழுமையான பட்டியல் 

நிலவுக்கு மனிதனை அனுப்பும் அடுத்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நாசா தேர்ந்தெடுத்த நிறுவனங்களின் முழுமையான பட்டியல் கீழே உள்ளது. 

ஏரோஜெட் ராக்கெட்டைன்(Aerojet Rocketdyne ) 

ப்ளூ ஆரிஜின்(Blue Origin) 

ஸ்பேஸ்எக்ஸ்(SpaceX) 

போயிங்(Boeing) 

Dynetics(டைனடிக்ஸ்) 

லாக்ஹீட் மார்ட்டின்(Lockheed Martin) 

மஸ்டன் ஸ்பேஸ் சிஸ்டம்ஸ்(Masten Space Systems) 

Northrop Grumman Innovation Systems(நார்த்ரோப் க்ரூமன் இன்னோவேசன் சிஸ்டம்ஸ்) 

ஆர்பிட்பியாண்ட்(OrbitBeyond) 

Sierra Nevada Corporation(செய்ரா நெவாடா கார்ப்பரேசன்) எஸ்எஸ்எல்(SSL)

உலக சாதனை படைத்த விஞ்ஞானிகள் எல்லாம் அரசுப் பள்ளியில் படித்தவர்களே.! பெருமிதம் கொள்ளுங்கள்.!




தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளைத் தனியாருக்குக் கைமாற்றம் செய்யும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னை, கோவை, கடலூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் சைக்கிள் பேரணி நடத்தினர்.

மாணவர் சங்கத்தினர் நடத்திய சைக்கிள் பேரணி கோவையில் மாணவர் சங்கத்தினர் நடத்திய சைக்கிள் பேரணியை, இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கொடி அசைத்துத் துவங்கி வைத்தார். காந்திபுரத்தில் துவங்கிய பேரணி 6 நாட்களில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் வழியாகத் திருச்சி சென்றடைகிறது.

அரசுப் பள்ளியில் படித்த இந்திய விஞ்ஞானிகள் சைக்கிள் பேரணியைத் துவக்கி வைத்த மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது,"அமெரிக்கா, ரஷ்யா போன்ற உலக நாடுகளால் செய்ய முடியாத பல சாதனைகளை, அரசுப் பள்ளியில் படித்த இந்திய விஞ்ஞானிகள் சாதித்துக் காட்டி இருக்கின்றனர்" என்று பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம் எனவே அரசுப் பள்ளிகளைப் பெற்றோர்கள் ஏளனம் செய்யாமல் தங்களின் பிள்ளைகள் கல்வி பயில அனுப்புங்கள் எனவும், அரசுப் பள்ளிகளில் உள்ள காலி ஆசிரியர் இடங்களை அரசாங்கம் நிரப்ப வேண்டும் என்றும் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

அதுதான் நமது தமிழ்நாட்டிற்கே பெருமை அடுத்த தலைமுறையும் அன்னைத்தமிழில் கல்வி பயில்வதை நாம் ஊக்குவிக்க வேண்டும். அதுதான் நமது தமிழ்நாட்டிற்கே பெருமை என்றும் அவர் தெரிவித்தார்.




400அடி தடிமனுக்கு உருகிய அண்டார்டிகா பனிப்பாறைகள் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!



கடந்த இரண்டு தசாப்தங்களாக மிகப்பெரிய பனிப்பாறைகள் முழுவதும் முன் எப்போதும் இல்லாதவகையில் உருகிவருவதால், தற்போது மேற்கு அண்டார்டிகாவில் உள்ள பனிக்கட்டியில் கிட்டத்தட்ட கால்பகுதி நிலையில்லாமல் இருப்பதாக கருதப்படுகிறது.

1992 ல் இருந்து அனைத்து செயற்கைக்கோள்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 800 மில்லியனுக்கும் அதிகமான அளவீடுகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள், பைன் தீவு மற்றும் ட்வைடிஸ் பனிப்பாறைகள், இந்த ஆய்வுதொடங்கும்போது இருந்த வேகத்தை காட்டிலும் இப்போது ஐந்து மடங்கு வேகமாக உருகிவருவதாக கண்டறிந்துள்ளனர். அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில், பனிக்கட்டிகள் அதிகபட்சமாக 122 மீட்டர் (400 அடி) தடிமனுக்கு உருகியுள்ளால், அவ்வாறு பாதிக்கப்பட்ட பனிப்பாறைகள் நிலையற்றதாக மாறியுள்ளன.

எச்சரிக்கை மணி மேலும் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளின் படி, தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ள பனிப்பாறைகள் உருகுதலின் விளைவாக கடல்மட்டம் உயருதல் போன்றவற்றின் மூலம் கடலோரப் பகுதியில் உள்ள நகரங்களுக்கும் அதிக பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத்திற்கு எச்சரிக்கை மணி அடித்துள்ள இந்த ஜியோபிசிகல் ஆராய்ச்சி முடிவுகள், பெரும்பான்மையான மிகப்பெரிய பனிப்பாறைகள் உட்பட மேற்கு அண்டார்டிகாவில் 24 சதவிகிதத்திற்கு மேற்பட்ட பகுதிகளில் இந்த பனிக்கட்டி உருகுதல் பரவியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பனிக்கட்டிகள் உருகுதல் பனிப்பொழிவால் அதிகரிக்கும் பனிப்பாறைகளின் நிறையை காட்டிலும், பனிக்கட்டிகள் உருகுதல் மற்றும் பனிப்பாறைகள் மிதக்கும் நிகழ்வுகளால் இப்பகுதிகளில் மிகப்பெரிய அளவிலான பனிப்பாறைகள் குறைந்துவருகின்றன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

கிரையோசாட்-2 "அண்டார்டிக்காவின் பல்வேறு பகுதிகளில் பனிப்பாறைகள் அசாதாரண அளவில் உருகிவரும் நிலையில், காலநிலை மாற்றங்கள் மற்றும் வானிலையின் காரணமாக எவ்வளவு தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை எங்கள் ஆராய்ச்சி முடிவுகளில் தெரிவித்துள்ளோம்." என்கிறார் இந்த ஆராய்ச்சி கட்டுரையின் முன்னணி எழுத்தாளர் ஏன்டி ஷெப்பர்ட். 1992 மற்றும் 2017 க்கு இடையில் ஈஆர்எஸ்-1, ஈஆர்எஸ்-2, என்விசாட், மற்றும் கிரையோசாட்-2 ஆகிய செயற்கைகோள்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட பனிப்பாறைகளின் உயரங்கள் மற்றும் ராக்மோ பிராந்திய காலநிலை மாதிரியில் இருந்து பனிப்பொழிவு உருவகப்படுத்துதல்கள் ஆகிய தரவுகளை இக்குழு தங்களது ஆராய்ச்சிக்கு பயன்படுத்தியுள்ளது.

24 சதவிகிதம் குறுகியகால வெப்பநிலை மாற்றம் மற்றும் கடல் வெப்பநிலை அதிகரித்து வரும் நீண்ட கால நிகழ்வுகளிலிருந்து தோன்றிய மாற்றங்கள் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாட்டை அறிந்துகொள்ள இந்த ஆய்வு அனுமதித்தது. பனிப்பொழிவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் சில பகுதிகளில் பனிப்பாறைகளின் உயரத்தில் சிறிய மாற்றங்களுக்கு வழிவகுத்திருந்தாலும், இந்த விளைவுகள் ஒரு சில வருடங்களுக்கு மட்டுமே நீடித்தது. பனிப்பாறைகளின் தடிமனில் ஏற்பட்ட வியத்தகு மாற்றங்கள், மறுபுறம் பல தசாப்தங்களாக மோசமடைந்து அவற்றின் உறுதியற்ற தன்மையை முன்னிலைப்படுத்துகின்றன. மேற்கு அண்டார்டிக்காவில் 24 சதவிகிதம் இப்போது நிலையற்றதாக இருக்கிறது என இக்குழு கண்டறிந்துள்ளது.

பனிப்பொழிவு "பனிப்பொழிவு எந்த அளவிற்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்திருப்பது, செயற்கைக்கோள் பதிவில் உள்ளபோல பனிப்பாறைகளில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய எங்களுக்கு உதவியது "என்று ஷெப்பர்ட் கூறினார். "அண்டார்க்டிக்காவின் மிகவும் பாதிக்கப்படும் பனிப்பாறைகள் சிலவற்றில் பனிக்கட்டிகள் உறுகி விரைவாக பரவி வருவதை இப்போது தெளிவாகக் காண முடிகிறது, மேலும் இதன் இழப்புகள் பூமியை சுற்றியுள்ள கடல் மட்டங்களை உயர்த்துகிறது" என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக கிழக்கு மற்றும் மேற்கு அண்டார்டிக்காவில் ஏற்பட்ட பனிப்பாறை உருகுதல் நிகழ்வு, 1992 க்கு பிறகு உலகளாவிய கடல் மட்ட உயர்வில் 4.6 மிமீ அளவிற்கு பங்களித்திருக்கின்றன.


முழுவதும் உறைந்த ப்ளூட்டோவில் திரவ நிலையில் கடல்கள்!

 
சூரிய மண்டலம் நாம் முன்பு நினைத்ததை விட நீர் ததும்பிய ஒர் சோகிகர் இடமாக இருக்கலாம் .அதாவது க்யூபர் பெல்ட் என அழைக்கப்படும் நெப்ட்யூனை தாண்டிய கிரகங்களிலும் கூட இதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. சிறு கிரகமான புளூட்டோவின் நைட்ரஜன் பனிக்கட்டி அடுக்கின் கீழே ஒரு திரவ நிலையில் கடல்கள் இருக்கலாம்.

புளூட்டோவில் திரவ கடலை பராமரிக்க வேண்டிய வெப்பநிலை, தடித்த பனிப்பகுதியை உருகவிடாமல் தடுக்கும் அளவிற்கு மிக அதிகமானதாக இருக்கும் என அனைவரும் நினைத்திருந்த நிலையில், ஜப்பானிய வானியலாளர்கள் ஒரு புதிய சாத்தியக்கூறை கண்டறிந்துள்ளனர். பனிப்பகுதியின் அடுக்கிற்கு கீழேயும் திரவத்தின் மேலேயும் உள்ள ஒரு வாயு அடுக்கு, அவை ஒன்றுக்கொன்று இணைய அனுமதிப்பதில்லை.

நியூ ஹாரிஜான்ஸ் ஸ்புட்னிக் ப்ளானிடியா என்ற ப்ளுட்டோவில் காணப்படக்கூடிய மிகதடிமனான பனிக்கட்டி பரப்பில் நியூ ஹாரிஜான்ஸ் ஆய்வு மூலம் கண்டறியப்பட்ட ஈர்ப்புத் திறனையும், அதன் மத்திய பகுதி மற்றும் குறைந்த புவியியல் அமைப்பையும் கொண்டு, அதற்கு அடியில் திரவநிலையில் கடல் உள்ளதை கண்டறிவதற்கு உதவும்.

திரவக் கடல் ஸ்புட்னிக் ப்ளானிடியாவின் கீழ் உள்ள திரவக் கடல் மூலம் அக்கிரகத்தின் டெக்டோனிக் அம்சங்களையும் விளக்கலாம். புளூட்டோவின் வயது மற்றும் இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு விஞ்ஞானிகள் அதன் எல்லா திரவங்களும் திடீரென உறைந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.

புளூட்டோ "திரவ கடலை தக்க வைத்துக் கொள்ள, புளூட்டோ வெப்பத்தை உள்ளே தக்க வைத்துக் கொள்ள வேண்டும். மற்றொருபுறம் அதன் பனிஅடுக்கின் தடிமனை பராமரிக்க, ப்ளூட்டோ தனது பனிப்பாறைகளை குளிர்ச்சியாக வைத்து இருக்க வேண்டும் "என்று அறிவியலாளர்கள் தங்களது ஆய்வுக்கட்டுரையில் கூறியுள்ளனர்.

ப்ளூட்டோவிற்கு சென்று ஆராய முடியாது "இரண்டும் எப்படி சாத்தியம் என இங்கே நாம் விளக்குகிறோம் ... பனிக்கட்டி அடுக்கின் அடித்தளத்தில் உள்ள கிளாத்ரேட் ஹைட்ரேட்ஸ்-ன்(வாயு ஹைட்ரேட்ஸ்) மெல்லிய அடுக்கு, கடல்கள் திரவநிலையில் நீண்டகாலம் உயிர்ப்புடன் இருப்பதற்கும், பனிஅடுக்கின் தடிமன் முரண்பாடுகளை பராமரிக்கவும் உதவுகிறது" இதை ப்ளூட்டோவிற்கு சென்று ஆராய முடியாது என்பதால் கம்ப்யூட்டர் சிமுலேசன் முறையில்,வாயு ஹைட்ரேட் அடுக்கானது திடநிலையிலான பனிக்கட்டி தண்ணீரில் வாயு க்ளாத்ரேட் மூலக்கூறுகள் மூலம் அவ்வாறு மாறியதாக கண்டறிந்துள்ளனர்.

வாயு ஹைட்ரேட் படலம் சூரிய மண்டலத்தின் வயதான 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி , ஆய்வாளர்கள் புளூட்டோ பரிணாமத்தை உருவகப்படுத்தினர். ஸ்புட்னிக் ப்ளான்டியா மற்றும் அடியில் உள்ள திரவகடல் ஆகியவற்றிற்கு இடையே உள்ள வாயு ஹைட்ரேட் அடுக்கு உள்ளபோது மற்றும் அது இல்லாமல் என இருவிதமாக ஆராய்ந்துள்ளனர். அவர்கள் அந்த சிறு கிரகத்தின் வெப்ப பரிணாமத்தை மாதிரியாக உருவாக்கி அடியில் உள்ள திரவகடல் பனிக்கட்டியாக மாற மற்றும் சீரான தடிமனான பனிஅடுக்கை உருவாக்க இனி எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளும் என கணக்கிட்டனர்.அந்த வாயு ஹைட்ரேட் படலம் இல்லாமல் இருந்திருந்திருந்தால் சுமார் 800 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது பூமியின் முதல் விலங்குகள் உருவாக தொடங்கிய போதே திரவக்கடல் முழுமையாக உறைந்திருக்கும் என்று அவர்கள் கண்டறிந்தனர். ஆனால் தற்போது அந்த வாயு ஹைட்ரேட் படலம் இருப்பதால் கடல் இன்னமும் திடநிலையில் பனிக்கட்டியாக மாறாமல் உள்ளது. அது இல்லாமல் வெறும் 100 மில்லியன் ஆண்டுகளிலேயே பனிக்கட்டி ஆகியிருக்கவேண்டிய கடல், தற்போது பல பில்லியன் ஆண்டுகளாக திரவநிலையிலேயே உள்ளது.