Laptop Reviews லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Laptop Reviews லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உலகின் அபாயகரமான லேப்டாப் விற்பனைக்கு வந்துள்ளது: காற்று கூட நுழையமுடியாத ஒரு பெட்டியில் உள்ளது.


உலகின் மிகவும் அபாயகரமானதாகக் கருதப்படும் 6 வைரஸ்கள் நிறைந்த சாம்சங் லேப்டாப் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது, குறிப்பாக சர்வதேச அளவில் சுமார் 100பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இந்த லேப்டாப் மூலம் சேதாரம் ஏற்பட்டுள்ளது  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் xp மென்பொருளின் கீழ் இயங்கும் இந்த லேப்டாப் தான் உலகின் அபாயகரமான லேப்டாப் என்று கூறப்படுகிறது. பின்பு இது வெறும் லேப்டாப் மட்டுமல்ல அபாயகரமான இயந்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.

சாம்சங் வெறும் 10.5 இன்ச் அளவிலான திரை மட்டுமே கொண்டு, விண்டோஸ் Xp அமைப்பில் செயல்படும் இந்த சாம்சங் லேப்டாப்பில் உலகின் மிக அபாயகரமான 6 வைரஸ்கள் உள்ளன. இந்த 6 வைரஸ்கள் இதுவரை 7லட்சம் கோடி வரையிலான சேதத்தை உலகில் ஏற்படுத்தியுள்ளது

க்யோ ஒ டாங் பின்பு இதனை உருவாக்கியவர் க்யோ ஒ டாங் என்பவர் ஆவார், சைபர் செக்யூரிட்டி துறையில் ஆழமான உள்ளுணர்வு கொண்ட இவரை ஒரு மிகப்பெரிய கலைஞர் என்று தான் அழைக்க வேண்டும். உலகத்தில் 7 லட்சம் கோடி வரையிலான சேதங்களை ஏற்படுத்திய ஒன்றை உருவாக்கிய கலைஞர்.

1.2மில்லியன் 10.5-இன்ச் கொண்ட லேப்டாப் தற்சமயம் ஏலம் விடப்பட்டுள்ளது, இதற்கான துவக்க விலையே 1.2மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இந்த லேப்டாப் ஏலம் விடப்படும் செய்தி வைரலானது, இந்த ஏலம் நிகழ்வு லைவ் ஆகக் ஒளிபரப்பப்படும் அளவுக்கு வரவேற்புப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காற்று கூட நுழையமுடியாத ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது இதில் உள்ள அபாயகரமான வைரஸ்களின் பாதிப்பிலிருந்து தப்பிக்க இந்த லேப்டாப் தற்போது காற்று கூட நுழையமுடியாத ஒரு பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது, பின்பு The Persistence of Chaos என்ற இணையதளத்தில் இந்த சாம்சங் லேப்டாப்-க்கான ஏலம் நடைபெறுகிறது.


உலகின் முதல் 5ஜி பிசியை உருவாக்கிய குவால்காம் மற்றும் லெனோவோ.!

கம்ப்யூட்டக்ஸ் 2019ல், குவால்காம் மற்றும் லெனோவோவுடன் இணைந்து உலகின் முதல் 5ஜி பிசியை உருவாக்கியுள்ளது.
இதை திட்ட வரம்புக்கு ஏற்றவாறு வடிமைக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 8சிஎக்ஸ் கம்ப்யூட் தொகுதிக்கு குவால் காம் வழங்கும் போது, லெனோவோ மற்ற வன்பொருள் கட்டடைப்பை முடிக்க வேண்டும்.
Snapdragon 8cX 5G என்பது உலகின் முதல் 7nm PC Platform ஆகும். மேலும், இது PC க்கு 5G இணைப்பு வழங்கும் உலகின் முதல் செயல்திறனாகும்.

இணைப்பு விகிதம்:

ஸ்னாப்டிராகன் 8சிஎக்ஸ் கணக்கிடு தொகுதி ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 5ஜி மோடத்தை ஆதரிக்கிறது. இது 4ஜி எல்டிஇயிலும் இணைப்பு விகித்தை வழங்கும்.
ஒரு மடிக்கணியில் 4ஜியை விளையாட்டாகவே நாம் 5ஜி இணைப்பாகவும் பயன்படுத்தவும் முடியும்.

செயல்திறன்:

8சிஎக்ஸ் தொகுதி குவால்காம் ட்ரீனோ 680 ஜிபியூவை கொண்டுள்ளதால், செயல்தின் உங்களை உச்சமாக இருக்கும். வேகமான ஸ்காப் சிபியூ ஆனது குவால்காம் கிரியோ 495 சிபியூ ஆகும். பல நாட்களுக்கு பேடடரி தாக்குபிடித்து நிற்கும் தன்மை கொண்டது.

மோடத்தை அதிரிக்கும் :

குறைந்த நெட்வோர் இணைப்புக்காக குவால்காம் அதனுடன் எக்ஸ்24 எல்டிஇ மோடத்தை இணைக்கிறது. எனவே எல்டிஇ வழியாக குறைந்த பிணைய இணைப்புகளில் குறைந்தபட்சம் 2ஜிபிபிஎஸ் வேகம் கிடைக்கும். குறைந்த பிணைய இணைப்பு இருந்தால், எல்டிஇ என்று அர்த்தம்.

குறைந்த நெட்வொர்க் இணைப்பு:

குறைந்த நெட்வொர்க் இணைப்புக்காக குவால்காம் அதனுடன் X24 LTE மோடத்தை இணைக்கிறது. எனவே, LTE வழியாக குறைந்த பிணைய இணைப்புகளில் குறைந்தபட்சம் 2 Gbps வேகம் கிடைக்கும்.
2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த செயலி மற்றும் லேப்டாப் ஆகியவற்றை வணிக ரீதியாக விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். இருப்பினும், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட தேதி தற்போது அறிவிக்கப்படவில்லை.

8ஜிபி ரேம் உடன் வெளிவந்த அசுஸ் ஜென்புக் 14: விமர்சனம்!


அசுஸ் நிறுவனம் சிறந்த லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் மாடல்களை அன்மையில் அதிகளவு அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறது. அதன்படி இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஜென்புக் 14 என்ற லேப்டாப் மாடல் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் ஜென்புக் 14 லேப்டாப் மாடலுடன் வெளிவந்த ஜென்புக் 15 மற்றும் ஜென்புக் 13 மாடல்களும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும்.

அசுஸ் ஜென்புக் 14 லேப்டாப் விலையைப் பொறுத்தவரை ரூ.74,990-ஆக உள்ளது. இருந்தபோதிலும் விலைக்கு தகுந்த சிறப்பான அம்சங்களுடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

பெசல்-லெஸ் வடிவமைப்பு 

அசுஸ் ஜென்புக் 14 லேப்டாப் பொதுவாக பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1.19கிலோ எடைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் அனைத்து இடங்களுக்கும் எடுத்து சென்று மிக அருமையாக பயன்படுத்த முடியும். பின்பு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட், யுஎஸ்பி போர்ட், ஹெட்போன் ஜாக், பேட்டரி இன்டிகேட்டர், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


கீபோர்டு மற்றும் டிராக்பேட்: 

அசுஸ் ஜென்புக் 14 லேப்டாப் சாதனத்தில் பேக்லைட் கீபோரட் மற்றும் அசத்தலான டிராக்பேட் வசதியும் உள்ளது. இந்த அம்சங்கள் வீடியோ எடிட்டிங், மற்றும் பல்வேறு ஆன்லைன் வேலைகளுக்கு மிக அருமையாக செயல்படும். மேலும் டைப்பிங் செய்ய மிக எளிமையாக பயன்படுகிறது ஜென்புக் 14 லேப்டாப் மாடல்.

சேமிப்பு: 

ஜென்புக் 14 லேப்டாப் பொறுத்தவரை இன்டெல் கோர் ஐ7 செயலி யுஎச்டி கிராபிக்ஸ் 620ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது, அதேபோன்று 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாதனம். எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பேட்டரி: 

அசுஸ் ஜென்புக் 14 லேப்டாப் மாடலில் 50வாட் லித்தியம் பேட்டரி இடம்பெற்றுள்ளது, இது சுமார் 4மணி நேரம் பேட்டரி பேக்அப் கொடுக்கிறது. இருந்தபோதிலும் இந்த சாதனத்தின் விலை மட்டும் சற்று உயர்வாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே: 

ஜென்புக் 14 லேப்டாப் சாதனம் பொதுவாக 14-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 92 சதவிகிதம் ஸ்கிரீன்-டூ-பாடி ரேஷியோ அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் சிறந்த திரை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் கூட அதிக வெளிச்சத்துடன் இந்த சாதனத்தை பயன்படுத்த முடியும்.