News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கீழே இருப்பவை எந்த நாட்டில் புழக்கத்தில் இருந்த பணம் என்று உங்களால் கூற முடியுமா?
இது என்ன பிரமாதம், இது இந்திய தேசத்தின் பணம் என்று கூறுகிறீரா?? அது தான் தவறு. பணத்தின் மதிப்பையும், அதன் நிறத்தையும் பாருங்கள். இந்த பணத்தை யாராவது இந்தியாவில் புழக்கத்தில் இருப்பதை கண்டிருக்கின்றீரா? (குறிப்பாக 1950 மற்றும் 60களில் பிறந்தவர்கள்)
மேலிருக்கும் படத்தில் உள்ள பணம் அரபு நாடுகளுக்காக இந்திய அரசு அச்சிட்ட பணம். Gulf ரூபாய் (வளைகுடா ரூபாய்) என்றழைக்கப்படும் இவை ஒரு காலத்தில் அரபுநாடுகளில் புழக்கத்தில் இருந்தது.
இந்திய ரூபாயின் ஒத்த வடிவமைப்பை வளைகுடா ரூபாய் கொண்டிருந்தாலும், 1 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நோட்டுகள் சிவப்பு நிறத்திலும், 5 ரூபாய் நோட்டுகள் ஆரஞ்சு நிறத்திலும், 100 ரூபாய் நோட்டுகள் பச்சை நிறத்திலும் அச்சிடப்பட்டிருந்தது. மேலும் வளைகுடா பணங்கள் அனைத்தும் Z சீரிஸ் வகைகளாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது, இந்திய ரூபாயில் "பாகிஸ்தான்" என்று முத்திரையிட்டு நமது பணத்தை பாகிஸ்தான் பயன்படுத்தி வந்தது என்பது பலர் அறிந்ததே. அதே வேளையில் யேமென், ஓமான், துபாய், குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு நாடுகள், கென்யா, தன்சானியா, உகாண்டா, செய்செல்லெஸ், மற்றும் மொரிஷியஸ் இந்திய ரூபாயை தனது நாட்டின் அதிகார்வப்பூர்வ நாணயமாக பயன்படுத்தி வந்தது.
தங்கம் கடத்தலில் இருந்து இந்தியாவின் பண கையிருப்பை பாதுகாக்கும் நோக்கில், இந்தியாவுக்கு வெளியே புழங்கும் விதத்தில் 1959-ஆம் ஆண்டில் வளைகுடா ரூபாயை இந்திய அரசு வெளியிட்டது. 1961-ஆம் ஆண்டு குவைத், குவைத் தினாருக்கும், பஹ்ரைன், பஹ்ரைன் தினாருக்கும் மாறியது. 1966ஆம் ஆண்டு வளைகுடா ரூபாயின் மதிப்பை இந்தியா குறைத்து. இதனை தொடர்ந்து ஓமான், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் தத்தமது நாணயங்களை அறிமுகப்படுத்தி வளைகுடா ரூபாய் புழக்கத்திலிருந்து விலகியது.
இன்று நேபாள், பூட்டான் மற்றும் ஜிம்பாப்வே[1] நாடுகள் இந்திய ரூபாய் பரிவர்த்தனையை ஏற்றுக்கொள்கிறது.
அடிக்குறிப்புகள்
செவ்வாயில் களிமண் கணிமங்கள்: கண்டறிந்த நாசா கியூரியாசிட்டி விண்கலம்.!
நாசா தொடரந்து செவ்வாய் கிரகத்தில் பல்Nவுறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகிறது, இந்நிலையில் நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் கடந்த மே 12-ம் தேதி, மவுண்ட் ஷார்ப் என்ற பகுதியில் அபர்லேடி கில்மேரி என பெயரிடப்பட்டுள்ள இரு இடங்களில் கியூரியாசிட்டி துளையிட்டுள்ளது.
செல்பீ படமாக பின்பு இதை செல்பீ படமாக எடுத்தும் கியூரியாசிட்டி அனுப்பியுள்ளது, அது துளையிட்ட இடங்கிளில் களிமண் கனிமங்கள் அதிக இருந்துள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உயரிகளுக்கு ஆதாரமான நீர் இருக்கும் இடங்களிலேயே களிமண் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாயில் உயிரினங்கள் அந்தவகையில் பல நூறுகோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருந்திருக்கக் கூடுமா என்பதைக் கண்டறிவதற்காக மவுண்ட் ஷார்ப் பகுதியில் கியூரியாசிட்டி ஆய்வு மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
விஞ்ஞானிகள் நிலவு மற்றும் செவ்வாயில் மனிதர்களைத் தங்கவைப்பதற்கான பல புதிய திட்டங்களை நாசா மேற்கொண்டு வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. உலக நாடுகள் பலவும் இந்த முயற்சியில் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் செவ்வாயில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்திய கூறு மிகக் குறைவாக உள்ளதென்று விஞ்ஞானிகள் தெரிவித்து வந்தனர்
15 புகைப்படங்களை செவ்வாயிலிருந்து அனுப்பியுள்ளது அதனைப் பொய் என்று நிரூபிக்கப் பல விஞ்ஞானிகளும் பல முன்னனி நாடுகளும் முயன்று வருகின்றது. இந்நிலையில் தற்பொழுது அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் வகையில் நாசாவின் கியூரியாசிட்டி செயற்கைக்கோள் செவ்வாயில் உயிர்கள் உள்ளதென்று 15 புகைப்படங்களை செவ்வாயிலிருந்து அனுப்பியுள்ளது.
வேற்று உயிர் படிமங்கள் செவ்வாயின் மேற்பரப்பிலிருந்து, இந்த கியூரியாசிட்டி ரோவர் செயற்கைக்கோள் செவ்வாய்க் கிரகத்தைப் படம் பிடித்துள்ளது. கியூரியாசிட்டி ரோவர் படம்பிடித்த 15 புகைப்படத்தில் செவ்வாயின் மேற்பரப்பில் வேற்று உயிர் படிமங்கள் வாழ்வது தெரியவந்துள்ளது.
நீங்கள் கவலைப் படவேண்டாம் நீங்கள் கவலைப் படவேண்டாம் இவை ஏலியன் உயிரினங்கள் இல்லை, முழுதாய் உருவான உயிரினமும் இல்லை, புகைப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உயிர் படிமங்கள் புஞ்சை மற்றும் பாசி மாதிரியை சேர்ந்தது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிர் நிலைகள் வாழ்வதற்கான சாத்தியக் கூறு கண்டுபிடிப்பு முன்பு செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் உயிர்கள் வாழ்விடம் வசிக்க முடியாதது என்று நம்பப்பட்டது, ஆனால் தற்பொழுது அறியப்பட்டுள்ள தகவலின்படி செவ்வாயின் மேற்பரப்பிற்குக் கீழே உயிர் நிலைகள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் நன்றாக இருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.
அதிகப்படியான வளர்ச்சியை அடைந்து வரும் உயிர் படிமம் இந்த உயிர் படிமங்கள் காளான்கள், தண்டுகள் மற்றும் ஸ்போர்களைப் போல் தோற்றமளிக்கிறது. இதுவரை சுமார் 15 உயிர் மாதிரிகளை நாசா படம்பிடித்துள்ளது. இதில் அதிகப்படியான சுவாரசியம் என்னவென்றால் இந்த உயிர் படிமங்கள் மூன்று நாட்களில் அதிகப்படியான வளர்ச்சியை அடைந்து, இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பது தான்.
நாசா பலதரப்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நாசா வளர்ந்து வரும் இந்த உயிர் படிமங்களை இன்னும் ஆராய்ந்து பார்க்க நாசா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இவை வேற்று என்ற பலதரப்பட்ட ஆராய்ச்சிகளை உரிய விஞ்ஞானிகளின் குழுவுடன் ஆராயத் திட்டமிட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
கூகுள்மேப் மூலம் லோக்கேஷனை சேர் செய்துவது எப்படி?
தற்போது ஆன்ட்ராய்டு போன்கள் வந்ததால், ஜிபிஎஸ் மற்றும் கூகுள் மேப் உதவியோடு நாம் எங்கு செல்கின்றோம் என்று தேடினால் ரூட் மேப்பில் கிடைக்கும். மேலும், அந்த ரூட் மேப்பில் ஸ்கிரீன் காட்டும், கூகுள் மேப் செயலில் உள்ள ரூட் ஆப்சனில் தேர்வு செய்து நமது விருப்பத்திற்கு ஏற்படியும் பயணம் செய்யலாம்.
அதில் எத்தனை கி.மீ, பயண நேரம், நாம் எந்த வாகனத் தேர்வு செய்கின்றோம். வழியில் என்னென்ன வசதிகள் உள்ளன என்று காட்டும். இந்நிலையில் கூகுள் மேப் எவ்வாறு நமக்கு வழியை காட்டுகின்றது. இதை வைத்து நமது லோக்கேஷனை எவ்வாறு அடுத்தவர்களுக்கு சேர் செய்யலாம் என்று பார்க்கலாம்.
ஸ்டேப் 1: உங்கள் ஸ்மார்ட் போனில் கூகுள் மேப்பிற்கு சென்று லோகேஷன் தேர்வு செய்யது கொள்ள வேண்டும்.
ஸ்டேப் 2: கூகுள் மேப்பில் அதில் நீங்கள் செல்லும் இடம் குறித்து டைப் அல்லது மைக் மூலமாகவும் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டேப் 3: பெயரை சொல்லி முடித்ததும்கூகுள் மேப் உங்களுக்கு ப்ளூ கலரில் நீங்கள் செல்லும் வழிக்கு வழியை கட்டுவது மட்டுமில்லாமல் எவ்வளவு ட்ராபிக் இருக்கின்றது என்பதையும் உங்களுக்கு காட்டும்.
ஸ்டேப் 4: இன்டர்நெட் இல்லை என்றால் கவலை பட வேண்டாம். இந்த ஆப் நீங்கள் ஆப்லைனில் பயன்படுத்தலாம்.
ஸ்டேப் 5: கூகுள் மேப் மூலமாக நாம் கேப் புக்கிங் செய்தும் கொள்ளலாம். மேலும் நீங்கள் செல்லும் இடத்திற்கு எவ்வளவு சார்ஜிங் செய்யப்படும் என்பதையும் தெரிவிக்கும்.
ஸ்டேப் 6: நாம் செல்லும் இடம் குறித்து கூகுள் மேப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும். லேக் கேஷன் சேர் என்று இருக்கும் அதை தேர்வு செய்து, வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்டவைகள் மூலம் நாம் அனுப்ப முடியும்.
ஸ்டேப் 7: அவர் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றார். சரியான வழியில் தான் வருகின்றாரா எனவும் தெரிந்து கொள்ள முடியும். மேலும், அவரை எளிமையாகவும் நாம் வரவேற்றுக் கொள்ள முடியும்.
குழந்தைகளுக்குப் பாடம் எடுக்கும் "எலிசா" டீச்சர்.! இவங்க வெறும் டீச்சர் இல்ல "ரோபோட் டீச்சர்".!
பின்லாந்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் ரோபோட்கள் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றன. "எலிசா" என்று அழைக்கப்படும் இந்த ரோபோட் பள்ளி மாணவர்களுக்கு மொழிப் பாடங்களை மிகத் துல்லியமாகக் கற்பிக்கிறது.
இந்த எலிசா ரோபோட்டினால் சுமார் 23 மொழிகளைப் புரிந்துகொள்ள முடியுமாம். அதேபோல் பேசவும் முடியும் என்று இதனை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் தற்சமயம் இந்த எலிசா ரோபோட், ஆங்கிலம், ஜெர்மனி மற்றும் பின்னிஷ் என்று வெறும் 3 மொழிகளில் மட்டுமே செயல்படும்படி வெளிவந்துள்ளது.
குழந்தைகள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் எலிசா ரோபோட் பொறுப்பாகவும், அழகாகவும் பதில் அளிக்கிறது. குழந்தைகளின் உணர்வுகள் உணர்ந்து நடந்துகொள்ளும் படி இந்த ரோபோட் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக எலிசா ரோபோட்டிற்கு கேமரா மற்றும் பிரத்தியேக சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்குப் பாடம் எடுப்பது மட்டுமின்றி, அவர்களுக்குக் கதைகள் சொல்லுவது, நடனம் ஆடுவது, பாடுவது எனப் பல வித்தைகளை தன்னுள் வைத்துள்ளது. மருத்துவம், விவசாயம் எனப் பல துறைகளில் ரோபோட்களின் வருகை அதிகரித்துள்ளது. தற்பொழுது கல்வித் துறையிலும் ரோபோட்கள் கால் பதித்திருப்பது எதிர்காலத்திற்கான அடுத்தபடி முயற்சி என்றே கூறவேண்டும்.
வாட்ஸ்ஆப் செயலியில் கிடைக்கிறது புதிய வசதி: ட்ரை பண்ணுங்க மக்களே.!
வாட்ஸ்ஆப் நிறவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் விரைவில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. தற்சமயம் வாட்ஸ்ஆப் செயலியில் கான்சிக்யூட்டிவ் வாய்ஸ் மெசேஜஸ் (Consecutive Voice Messages) என்ற பிளேபேக் அம்சம் ஆண்ட்ராய்டு அப்டேட் மூலம் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
இருமாதங்கள் சோதனைக்கு பின்பு.. இதற்க்குமுன்பு கடந்த மார்ச் மாதம் வாட்ஸ்ஆப் பீட்டா 2.19.86 பதிப்பில் இந்த அம்சம் வழங்கப்பட்டது, பின்பு இருமாதங்கள் சோதனைக்கு பின்பு இந்த புதிய வசதி அனைவருக்கும் வழஙப்பட்டு இருக்கிறது. குறிப்பாக வாட்ஸ்ஆப் செயலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் இந்த அம்சம் மூலம் வாய்ஸ் மெசேஸஜ்களை தொடர்சியாக கேட்க முடியும்.
புதிய அப்டேட் இந்த செயலியில் இப்போது வாய்ஸ் ய்ஸ் மெசேஜ்களை ஒவ்வொன்றாகவே கேட்க முடியும். குறிப்பாக புதிய அப்டேட் மூலம் வாய்ஸ் மெசேஜ்களில் ஒரே கிளிக் செய்து இடைவெளியின்றி கேட்க முடியும். பின்பு இதனுடன் வாட்ஸ்ஆப் அப்டேட்டில் CVE-2019-3568பிழையும் சரி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பைவேர் தாக்குதல் அன்மையில் வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்பைவேர் தாக்குதல் கண்டறியப்பட்டது, இந்த ஸ்பைவேர் பொதுவாக பயனரின் மொபைலில் வாய்ஸ் கால் மூலம் விவரங்களை சேகரித்தது. பின்பு வாய்ஸ்கால் அழைப்பை பயனர் ஏற்றபலும் ஏற்கவில்லை என்றாலும் பயனர் விவரங்களை இந்த ஸ்பைவேர் சேகரித்தது உறுதி செய்யப்பட்டது.
மின்னஞ்சல் ஸ்பைவேர் பொறுத்தவரை பயனர் ஸ்மார்ட்போனின் குறுந்தகவல்கள், ஜிபிஎஸ், லோகேஷன் மின்னஞ்சல் போன்ற பல்வேறு விவரங்களை சேகரித்து வந்தது. கடந்த மாதம் கண்டறியப்பட்ட பிழை ஏற்கனவே முந்தைய அப்டேட் மூலம் சரி செய்யப்பட்டது.
விளம்பரங்கள் தோன்றும் மேலும் 2020-ம் ஆண்டு முதல் வாட்ஸ்ஆப் செயலியில் விளம்பரங்கள் தோன்றும் என பேஸ்புக் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதுபற்றிய அறிவிப்பு நெதர்லாந்தில் நடைபெற்ற பேஸ்புக் வருடாந்திர விளம்பர பொதுக்கூட்டத்தில் வெளியாகி இருக்கிறது.மேலும் வாட்ஸ் செயலியில் எங்கு விளம்பரங்கள் தோன்றும் என்ற விவரங்கள் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.
டிவிட்டரில் வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் குறிப்பாக டிவிட்டரில் வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் பேஸ்புக் தனது வாடிக்கையாளர்கள் வியாபாரங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என நினைக்கிறது. இந்த புதிய அம்சம் வாட்ஸ்ஆப்பில் கிளிக் செய்யப்படும் விளம்பரங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது திட்டம் இந்நிறுவனத்தின் இரண்டாவது திட்டம் இன்ஸ்டாகிராம் சார்ந்து ஆகும், அதன்படி வாட்ஸ்ஆப் (ஐ.ஜி) கிளிக் செய்யப்படும் விளம்பரங்கள் என குறிப்பிடப்படுகிறது. மூன்றாவது திட்டத்தில் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்களை தோன்ற செய்வது ஆகும், இது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் விளம்பரங்களை தோன்றுவதை போன்று செயல்படும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது.
பப்ஜி விளையாடி மாரடைப்பால் உயிரிழந்த சிறுவன்.! கதறும் பெற்றோர்.!
பப்ஜி உலகம் முழுதும் அனைவராலும் பெரிதும் விளையப்பட்டுக்கொண்டிருக்கும் கேம் என்பது அனைவர்க்கும் தெரியும். இண்டோர் பகுதியைச் சேர்ந்த 16 வயது வாலிபர் தொடர்ச்சியாக 6 மணி நேரம் பப்ஜி கேம் விளையாடித் தோற்ற அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்.
பப்ஜி பற்றி ஆய்வுகள் என்ன தெரிவிக்கிறது தெரியுமா? உலகம் முழுதும் பலரும் இந்த பப்ஜி கேம்மை விரும்பி விளையாடி வருகின்றனர். பலரும் இந்த கேமிற்கு அடிமையாகி விட்டதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது. தொடர்ச்சியாக இந்த கேம்மை விளையாடும் பலருக்கும் மனரீதியான சோர்வும், குழப்பமும், விரக்தியும் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஃபுர்கான் குரேஷி மருத்துவர்கள் முன்பே தெரிவித்தது போல் சிறுவர்களுக்கு இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடம் என்று சொன்னது அனைத்தையும் உறுதிப்படுத்தும் விதமாக இப்பொழுது ஒரு உண்மை சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஃபுர்கான் குரேஷி என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், தொடர்ச்சியாக 6 மணிநேரத்திற்கு மேல் பப்ஜி கேம்மை விளையாடி மரணம் அடைந்திருக்கிறார்.
இறுதியாய் மகனின் அலறலைக் கேட்ட பெற்றோர் தொடர்ச்சியாக பப்ஜி விளையாடி, ஒருமுறை கூட வெற்றிபெற முடியாத காரணத்தினால் மனவிரக்தியில் சத்தமிட்டுக் கதறி அழுதுள்ளான். இந்த சம்பவம் நடந்த பொழுது ஃபுர்கான் குரேஷியின் தகப்பனாரும் அருகிலிருந்திருக்கிறார். மகனின் அலறலைக் கேட்டு வீட்டிலிருந்த அனைவரும் ஃபுர்கான் குரேஷியின் அருகில் வந்துள்ளனர்.
மயங்கி கீழே விழுந்த குரேஷி விரக்தியில் கதறி அழுத்த ஃபுர்கான் குரேஷி, சிறிது நேரத்திலேயே மயங்கி கீழே விழுந்திருக்கிறார். குரேஷியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவரை எழுப்ப முயன்றுள்ளனர். பேச்சு மொச்சு எதுவுமில்லாமல் குரேஷி இருப்பதாய் கண்டு விரைவாக மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர்.
மருத்துவர்களின் முயற்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லலும் பொழுதே குரேஷி இறந்திருக்கிறார். மருத்துவர்கள் குரேஷியைச் சோதித்த பொழுது அவருக்கு நாடித்துடிப்பு இல்லாமல் இருந்திருக்கிறது. நாடித்துடிப்பு இல்லாத போதும் மருத்துவர்கள் குரேஷியைக் காப்பாற்ற முயன்றிருக்கின்றனர், ஆனால் மருத்துவர்களின் முயற்சிகள் பயனளிக்கவில்லை.
மாரடைப்பு ஏற்பட காரணம் இதுதான் குரேஷியின் உடலைச் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் கூறியதாவது "சிறுவனின் இதயம் வலிமையாகத் தான் இருந்திருக்கிறது. கேம் விளையாடிய உற்சாகத்தில் அதிகமாக அட்ரினலின் சுரந்திருக்க கூடும், இவர் கத்தி கூச்சலிடத்தில் இதயத் துடிப்பு அதிகம் ஆகி இரத்த ஓட்டம் அதிகரித்து இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கும்" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
18 மணி நேரம் ஓய்வு இல்லாமல் பப்ஜி குரேஷி ஒரு நீச்சல் வீரர் என்று அவரின் பெற்றோர் தெரிவித்திருக்கின்றனர். ஃபுர்கான் குரேஷி சில நேரங்களைத் தொடர்ச்சியாக 18 மணி நேரம் ஓய்வு இல்லாமல் பப்ஜி கேம்மை விளைந்து வந்ததாகவும் அவரின் சகோதரர் தெரிவித்திருக்கிறார். விளையாட்டால் இவர் உயிரிழந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டாப் 10 பட்டியலில் சுந்தர்பிச்சைக்கு இடம் மறுப்பு: கிளம்பியது புதிய சர்ச்சை.!
பன்னிரண்டு மாதங்கள் என்பது எந்தவொரு தரத்திலும் நீண்ட காலமாக இருக்கிறது, ஆனால் நீங்கள் தொழில்நுட்ப உலகில் இருந்தால், அது வாழ்நாள் போல தோன்றலாம். அதை விட மேலாக நீங்கள் உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்தால், அந்த 12 மாதங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
ராயல் டச் ஷெல்
அதுபோல கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை , 2018 ஆம் ஆண்டின் உலகின் மிகவும் புகழ்பெற்ற சி.ஈ.ஓ என அறிவிக்கப்பட்டார்.ஆனால் 12 மாதங்கள் கழித்து அவர் டாப்10 பட்டியலில் கூட இல்லை. ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, புகழ் அளவீடு மற்றும் மேலாண்மை சேவைகளில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனமான 'ரெபுடேசன் இன்ஸ்ட்யூட்", உலகின் 10 புகழ்பெற்ற சி.ஈ.ஓ களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ராயல் டச் ஷெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பென் வான் பெர்டன் முதலிடம் வகிக்கிறார்.
சுந்தர் பிச்சை
அந்த அறிக்கையின்படி, சுந்தர் பிச்சை மட்டுமே அந்த பட்டியலில் இடம்பெறாத தொழில்நுட்ப நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அல்ல. கடந்த ஆண்டு டாப் 10 பட்டியலில் இருந்த "லிங்கிடு இன்" தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் வீனெர்-க்கும் இந்தாண்டு பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. ஒட்டுமொத்தமாக 2018ல் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றிருந்த 8 சி.ஈ.ஓ-கள் இந்தாண்டு பட்டியலில் இடம்பெறவில்லை.
கூகுள் நிறுவனம்
சுந்தர் பிச்சையை பொறுத்தமட்டில் ஃபோர்ப்ஸ் அறிக்கை கூறுவது என்னவெனில், "நிறுவனத்தின் பாலியல் குற்றச்சாட்டுக்களைக் கையாளுதலில் ஏற்பட்ட சர்ச்சைகள்" மற்றும் ஒரு சில தரவு விதிமீறல்கள் போன்ற சில சிக்கல்களில் கூகுள் நிறுவனம் மற்றும் சுந்தர் பிச்சை கடந்த ஒரு வருடமாக விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர் மற்றும் அதன் காரணமாக கூகுள் பிளஸ் செயலியும் மூடப்படுகிறது.
இன்ஸ்ட்யூட் அறிக்கை
சுந்தர் பிச்சை புகழ்பெற்ற தலைமை நிர்வாக அதிகாரி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது பற்றி ரெபுடேசன் இன்ஸ்ட்யூட் அறிக்கை கூறியதாவது "சுந்தர் பிச்சையின் தாழ்மையான நடத்தை மற்றும் ஈகோ இல்லாத தலைமை பண்பு போன்றவை கவர்ந்திழுக்கும் சி.ஈ.ஓவாக காண்பித்து மற்றவர்கள் அவரை பின்பற்ற வைத்தது மட்டுமின்றி, 2018இன் மிகவும் புகழ்பெற்ற தலைமை நிர்வாக அதிகாரியாக மாற்றியது. பிச்சை வலுவான தலைமை என்ற தோற்றத்தையும், தெளிவான மூலோபாய பார்வை மற்றும் எதிர்பார்க்கும் மாற்றத்தை திறமையாக வழங்குபவர் என உணரப்பட்டார்"
#1லிருந்து # 88ஆக வீழ்ச்சியடைந்தது.
2019 ஆம் ஆண்டிற்கு வேகமாக முன்னேறி பார்த்தால், சுந்தர் பிச்சை முன்னர் சிறந்து விளங்கிய பகுதிகளில் தான் அவரது வீழ்ச்சியே. சுந்தரின் தலைமை பண்பு கேள்விக்குள்ளானது மற்றும் கூகுளின் நியாயமற்ற நடவடிக்கைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த ஒரு கொந்தளிப்பான ஆண்டுக்கு பிறகு, 6.5 புள்ளிகள் குறைந்தது. தலைமைத்துவத்தின் வீழ்ச்சியின் காரணமாக, ஒட்டுமொத்தமாக 8.4புள்ளிகள் குறைந்து சுந்தர் பிச்சையின் புகழ் #1லிருந்து # 88ஆக வீழ்ச்சியடைந்தது.
10% பொதுமக்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, ரிபுடேசன் இன்ஸ்ட்யூட் நிறுவனம் தலைமை நிர்வாக அதிகாரிகளின் புகழ் பற்றிய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலை நிர்ணயிக்கும் முறை குறித்து விவரிக்கையில்," 2019 ஜனவரி முதல் பிப்ரவரி வரையிலான காலப்பகுதியில் 14 நாடுகளில் 230,000 க்கும் மேற்பட்ட தனிநபர்களிடம் கருத்துகணிப்பு நடத்தப்பட்டது. மொத்த மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 50% பேருக்கு தெரிந்திருந்த பிரபல நிறுவனங்களின் அனைத்து 140 சிஈஓகளும் கருத்தில்கொள்ளப்பட்டனர்.அந்த சிஈஓ க்கள் குறைந்தபட்சம் 10% பொதுமக்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். "
நீரினால் தோல் சுருக்கம் அடைவது ஏன்?
தோல் சுருக்கம் ஏற்படுவது, நீரில் ஊறி விடுவதால் தோலில் ஏற்படும் வீக்கம் என்று தான் நீண்ட காலமாக மக்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
இப்போது ஆராய்ச்சியாளர்கள் தோல் சுருக்கம் என்பது நரம்பு மண்டலத்தின் எதிர்வினை செயல் என்று கண்டறிந்து இருக்கிறார்கள்.
அதாவது, ஈரத்தினால் பொருட்களை தூக்குவதில் ஏற்படும் சிரமம், வழுக்கி விழும் சாத்தியங்கள் அதிகம். இதனால் மூளை நமது தோலுக்கு நரம்பு மண்டலத்தின் மூலமாக சுருக்கத்தினை ஏற்படுத்த கட்டளையை அனுப்பும்.
இதனால், சுருக்கமான விரல்களால் ஈரமான பொருட்களைத் தூக்குவது எளிது. உங்கள் விரல்களில் உள்ள சுருக்கங்கள் உங்களுக்கு அதிக பிடியைக் கொடுக்கும் தன்மையைப் பெறுகிறது.
மேலும் வாசிக்க : http://www.bbc.com/future/story/...
மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்!
NASA முதன்முறையாக ஒரு பெண் உட்பட சில மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் விண்கலத்தை வடிவமைப்பதில் உதவுவதற்கு கிட்டத்தட்ட ஒரு டஜன் நிறுவனங்களை தேர்ந்தெடுத்துள்ளது.
அடுத்த ஆறு மாதங்கள் முழுவதும்,ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் துறையில் மிகப்பெரிய நிறுவனங்கள் உள்பட நாசா தேர்ந்தெடுத்துள்ள பங்குதாரர்கள், 2024ம் ஆண்டு வரவிருக்கும் ஆர்டிமிஸ் மிஷனின் பல்வேறு பாகங்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.
'கேட்வே'
இந்த மிஷனின் ஒரு பகுதியாக, சந்திரனை ஆராய்வதற்காக விண்வெளி வீரர்களுக்கு ஒரு வழிவகையாக செயல்படும் 'கேட்வே' என்றழைக்கப்படும் ஒரு விண்வெளி நிலையத்தை கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளது நாசா. இந்த விண்வெளி நிலையத்தின் கட்டுமானப்பணி அடுத்த சில ஆண்டுகளில் தொடங்கி, முழுமையான கட்டமைக்கப்பட்ட பின்னர் சந்திரனின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.
நாசா
நாசா தேர்ந்தெடுத்துள்ள நிறுவனங்கள், ஆர்டிமிஸ் மிஷனின் மூன்று வெவ்வேறு பாகங்களில் கவனம் செலுத்தும். விண்வெளி வீரர்களை கேட்வே மற்றும் சந்திர சுற்றுப்பாதைக்கு இடையில் மாற்ற உதவும் டிரான்ஸ்பர் எலமெண்ட், அதேபோல் நிலவில் இருந்து பூமிக்கு வரவும், இங்கிருந்து நிலவிற்கு செல்ல உதவும் அஸ்சென்ட் மற்றும் டிஸ்சென்ட் எலமெண்ட்களும் இதில் அடக்கம்.
தனியார் துறை
நாசா மற்றும் தனியார் துறை இடையேயான இந்த ஒத்துழைப்பு நாசாவின் விண்வெளி ஆராய்ச்சியில் மட்டும் புதிய மைல்கல்லாக இருக்காமல், அந்நிறுவனம் செயல்படும் முறையிலும் இருக்கும்.
பாரம்பரிய முறைகளில் சவால் விடுக்கிறோம்
"சந்திரனுக்கு திரும்புவதை விரைவுபடுத்துவதற்காக, எங்கள் வணிகத்தைச் செய்வதற்கான பாரம்பரிய முறைகளில் சவால் விடுக்கிறோம். வன்பொருள் மேம்பாடு, செயல்பாடுகள், கொள்முதல், கூட்டு நிறுவனம் ஆகிய அனைத்தையும் மாற்றியமைப்போம்" என்கிறார் நாசாவின் தலைமையகத்தில் ஹீயூமன் லூனார் எக்ஸ்ப்ளோரேசன் ப்ரோகிராம் இயக்குனர் மார்ஷெல் ஸ்மித்.
20 சதவிகிதம் நிதியளிக்க வேண்டும்
"எங்கள் குழு விரைவில் மீண்டும் நிலவிற்கு திரும்புவதற்கு உற்சாகமாக உள்ளது. மற்றும் மனிதர்கள் தரையிறங்கும் அமைப்புகளைப் ஆராய எங்கள் பொதுத்துறை / தனியார் கூட்டணி அந்த செயல்முறையில் ஒரு முக்கியமான படியாகும் " எனவும் ஸ்மித் கூறினார். அனைத்து நிறுவனங்களும் $ 45 மில்லியனுக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியாக செலவினத்தில் குறைந்தபட்சம் 20 சதவிகிதம் நிதியளிக்க வேண்டும். இதன்மூலம் எதிர்கால விண்வெளி பயணங்களில் வரி செலுத்துவோரின் பணம் குறைவாக செலவழிக்கப்படும் என நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நாசா தேர்ந்தெடுத்த நிறுவனங்களின் முழுமையான பட்டியல்
நிலவுக்கு மனிதனை அனுப்பும் அடுத்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நாசா தேர்ந்தெடுத்த நிறுவனங்களின் முழுமையான பட்டியல் கீழே உள்ளது.
ஏரோஜெட் ராக்கெட்டைன்(Aerojet Rocketdyne )
ப்ளூ ஆரிஜின்(Blue Origin)
ஸ்பேஸ்எக்ஸ்(SpaceX)
போயிங்(Boeing)
Dynetics(டைனடிக்ஸ்)
லாக்ஹீட் மார்ட்டின்(Lockheed Martin)
மஸ்டன் ஸ்பேஸ் சிஸ்டம்ஸ்(Masten Space Systems)
Northrop Grumman Innovation Systems(நார்த்ரோப் க்ரூமன் இன்னோவேசன் சிஸ்டம்ஸ்)
ஆர்பிட்பியாண்ட்(OrbitBeyond)
Sierra Nevada Corporation(செய்ரா நெவாடா கார்ப்பரேசன்) எஸ்எஸ்எல்(SSL)
உலக சாதனை படைத்த விஞ்ஞானிகள் எல்லாம் அரசுப் பள்ளியில் படித்தவர்களே.! பெருமிதம் கொள்ளுங்கள்.!
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளைத் தனியாருக்குக் கைமாற்றம் செய்யும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னை, கோவை, கடலூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் சைக்கிள் பேரணி நடத்தினர்.
மாணவர் சங்கத்தினர் நடத்திய சைக்கிள் பேரணி கோவையில் மாணவர் சங்கத்தினர் நடத்திய சைக்கிள் பேரணியை, இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கொடி அசைத்துத் துவங்கி வைத்தார். காந்திபுரத்தில் துவங்கிய பேரணி 6 நாட்களில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் வழியாகத் திருச்சி சென்றடைகிறது.
அரசுப் பள்ளியில் படித்த இந்திய விஞ்ஞானிகள் சைக்கிள் பேரணியைத் துவக்கி வைத்த மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது,"அமெரிக்கா, ரஷ்யா போன்ற உலக நாடுகளால் செய்ய முடியாத பல சாதனைகளை, அரசுப் பள்ளியில் படித்த இந்திய விஞ்ஞானிகள் சாதித்துக் காட்டி இருக்கின்றனர்" என்று பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம் எனவே அரசுப் பள்ளிகளைப் பெற்றோர்கள் ஏளனம் செய்யாமல் தங்களின் பிள்ளைகள் கல்வி பயில அனுப்புங்கள் எனவும், அரசுப் பள்ளிகளில் உள்ள காலி ஆசிரியர் இடங்களை அரசாங்கம் நிரப்ப வேண்டும் என்றும் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
அதுதான் நமது தமிழ்நாட்டிற்கே பெருமை அடுத்த தலைமுறையும் அன்னைத்தமிழில் கல்வி பயில்வதை நாம் ஊக்குவிக்க வேண்டும். அதுதான் நமது தமிழ்நாட்டிற்கே பெருமை என்றும் அவர் தெரிவித்தார்.
400அடி தடிமனுக்கு உருகிய அண்டார்டிகா பனிப்பாறைகள் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
கடந்த இரண்டு தசாப்தங்களாக மிகப்பெரிய பனிப்பாறைகள் முழுவதும் முன் எப்போதும் இல்லாதவகையில் உருகிவருவதால், தற்போது மேற்கு அண்டார்டிகாவில் உள்ள பனிக்கட்டியில் கிட்டத்தட்ட கால்பகுதி நிலையில்லாமல் இருப்பதாக கருதப்படுகிறது.
1992 ல் இருந்து அனைத்து செயற்கைக்கோள்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 800 மில்லியனுக்கும் அதிகமான அளவீடுகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள், பைன் தீவு மற்றும் ட்வைடிஸ் பனிப்பாறைகள், இந்த ஆய்வுதொடங்கும்போது இருந்த வேகத்தை காட்டிலும் இப்போது ஐந்து மடங்கு வேகமாக உருகிவருவதாக கண்டறிந்துள்ளனர். அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில், பனிக்கட்டிகள் அதிகபட்சமாக 122 மீட்டர் (400 அடி) தடிமனுக்கு உருகியுள்ளால், அவ்வாறு பாதிக்கப்பட்ட பனிப்பாறைகள் நிலையற்றதாக மாறியுள்ளன.
எச்சரிக்கை மணி மேலும் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளின் படி, தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ள பனிப்பாறைகள் உருகுதலின் விளைவாக கடல்மட்டம் உயருதல் போன்றவற்றின் மூலம் கடலோரப் பகுதியில் உள்ள நகரங்களுக்கும் அதிக பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத்திற்கு எச்சரிக்கை மணி அடித்துள்ள இந்த ஜியோபிசிகல் ஆராய்ச்சி முடிவுகள், பெரும்பான்மையான மிகப்பெரிய பனிப்பாறைகள் உட்பட மேற்கு அண்டார்டிகாவில் 24 சதவிகிதத்திற்கு மேற்பட்ட பகுதிகளில் இந்த பனிக்கட்டி உருகுதல் பரவியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பனிக்கட்டிகள் உருகுதல் பனிப்பொழிவால் அதிகரிக்கும் பனிப்பாறைகளின் நிறையை காட்டிலும், பனிக்கட்டிகள் உருகுதல் மற்றும் பனிப்பாறைகள் மிதக்கும் நிகழ்வுகளால் இப்பகுதிகளில் மிகப்பெரிய அளவிலான பனிப்பாறைகள் குறைந்துவருகின்றன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
கிரையோசாட்-2 "அண்டார்டிக்காவின் பல்வேறு பகுதிகளில் பனிப்பாறைகள் அசாதாரண அளவில் உருகிவரும் நிலையில், காலநிலை மாற்றங்கள் மற்றும் வானிலையின் காரணமாக எவ்வளவு தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை எங்கள் ஆராய்ச்சி முடிவுகளில் தெரிவித்துள்ளோம்." என்கிறார் இந்த ஆராய்ச்சி கட்டுரையின் முன்னணி எழுத்தாளர் ஏன்டி ஷெப்பர்ட். 1992 மற்றும் 2017 க்கு இடையில் ஈஆர்எஸ்-1, ஈஆர்எஸ்-2, என்விசாட், மற்றும் கிரையோசாட்-2 ஆகிய செயற்கைகோள்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட பனிப்பாறைகளின் உயரங்கள் மற்றும் ராக்மோ பிராந்திய காலநிலை மாதிரியில் இருந்து பனிப்பொழிவு உருவகப்படுத்துதல்கள் ஆகிய தரவுகளை இக்குழு தங்களது ஆராய்ச்சிக்கு பயன்படுத்தியுள்ளது.
24 சதவிகிதம் குறுகியகால வெப்பநிலை மாற்றம் மற்றும் கடல் வெப்பநிலை அதிகரித்து வரும் நீண்ட கால நிகழ்வுகளிலிருந்து தோன்றிய மாற்றங்கள் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாட்டை அறிந்துகொள்ள இந்த ஆய்வு அனுமதித்தது. பனிப்பொழிவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் சில பகுதிகளில் பனிப்பாறைகளின் உயரத்தில் சிறிய மாற்றங்களுக்கு வழிவகுத்திருந்தாலும், இந்த விளைவுகள் ஒரு சில வருடங்களுக்கு மட்டுமே நீடித்தது. பனிப்பாறைகளின் தடிமனில் ஏற்பட்ட வியத்தகு மாற்றங்கள், மறுபுறம் பல தசாப்தங்களாக மோசமடைந்து அவற்றின் உறுதியற்ற தன்மையை முன்னிலைப்படுத்துகின்றன. மேற்கு அண்டார்டிக்காவில் 24 சதவிகிதம் இப்போது நிலையற்றதாக இருக்கிறது என இக்குழு கண்டறிந்துள்ளது.
பனிப்பொழிவு "பனிப்பொழிவு எந்த அளவிற்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்திருப்பது, செயற்கைக்கோள் பதிவில் உள்ளபோல பனிப்பாறைகளில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய எங்களுக்கு உதவியது "என்று ஷெப்பர்ட் கூறினார். "அண்டார்க்டிக்காவின் மிகவும் பாதிக்கப்படும் பனிப்பாறைகள் சிலவற்றில் பனிக்கட்டிகள் உறுகி விரைவாக பரவி வருவதை இப்போது தெளிவாகக் காண முடிகிறது, மேலும் இதன் இழப்புகள் பூமியை சுற்றியுள்ள கடல் மட்டங்களை உயர்த்துகிறது" என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக கிழக்கு மற்றும் மேற்கு அண்டார்டிக்காவில் ஏற்பட்ட பனிப்பாறை உருகுதல் நிகழ்வு, 1992 க்கு பிறகு உலகளாவிய கடல் மட்ட உயர்வில் 4.6 மிமீ அளவிற்கு பங்களித்திருக்கின்றன.
சூசகமாக முடிவு எடுத்து அதிரவிட்ட வாட்ஸ் ஆப்.! என்னனு தெரியுமா?
வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது ஒரு சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தன்னை காத்துக் கொள்ளவும் சந்தையில் நிலை நிறுத்திக் கொள்ளவும். வணிக சாமர்த்தியமான முடிவுகளையும் எடுத்து வருகின்றது. இதில் வாட்ஸ் ஆப் நிறுவனம் வருமானம் ஈட்ட இதுபோன்ற நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பொது மக்களையும் இந்த செயல் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வருமானம் குறைவு: கடந்த சில மாதங்களுக்கு முன் வாட்ஸ் ஆப் செயலியால் தங்களுக்கு எந்த வருமானம் இல்லை என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. வாட்ஸ் ஆப் செயலியால் வருமானம் இல்லை என்றும் கவலையை தெரிவித்து இருந்தது. இந்நிலையில் ஒரு முக்கிய முடிவையும் எடுத்துள்ளது.
வருமானம் ஈட்ட முடிவு: இந்நிலையில், இலவசமாக பயன்படுத்தப்படும் குறுஞ்செய்தி அனுப்பும் செயலியான வாட்ஸ்ஆப்புக்கு நாளுக்கு நாள் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதன் மூலம் வருமானம் ஈட்ட பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வாட்ஸ் ஆப்பில் விளம்பரம்: அதன்படி, வரும் 2020ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்ஆப்பில் விளம்பரங்கள் வரவிருப்பதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. இதனால் வாட்ஸ் ஆப்புக்கு வருவாயை அதிகரிக்கவும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
லிங்குடன் விளம்பரம்: நெதர்லாந்தில் நடந்த பேஸ்புக் வர்த்தக மாநாட்டில் இதுகுறித்து வெளியிடப்பட்ட தகவலில், முதல்கட்டமாக இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் வருவது போல வாட்ஸ்ஆப் ஸ்டோரிகளுக்கு இடையே லிங்குடன் விளம்பரம் செய்யும் வசதி வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன விவரங்களை ஸ்மார்ட்போனில் எடுத்துச் செல்வது எப்படி?
ஓட்டுர் உரிமம் மற்றும் இதர வாகனம் சார்ந்த ஆவணங்களை கையில் எடுத்து செல்ல நம்மில் பலரும் மறந்து விடுவோம். இவ்வாறு செல்லும் போது தான் போக்குவரத்து காவல் துறை நம்மை நிறுத்தி சோதனை செய்வர். இந்த பிரச்சனையை சரி செய்யவே மத்திய அரசாங்கம் எம் பரிவாஹன் எனும் அதிகாரப்பூர்வ செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியில் பயனர்கள் தங்களது வாகன பதிவு சான்றிதழ் (ஆர்.சி.), ஓட்டுனர் உரிமம் போன்றவற்றை ஸ்மார்ட்போனில் டிஜிட்டல் முறையில் வைத்துக் கொள்ளலாம்.
இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் கிடைக்கிறது. இவற்றை பயனர்கள் பிளே ஸ்டோர்களில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டாக்யூமென்ட்களை விர்ச்சுவல் முறையில் வைத்திருப்பதும், ஆவணங்களை அசலாக கையில் வைத்திருப்பதற்கு சமம். இதனால் ஆவணங்களை ஸ்மார்ட்போனில் இருந்து காண்பித்தாலே போதுமானது.
முதலில் தேவையானவை: விர்ச்சுல் டிரைவிங் லைசன்ஸ் மற்றும் ஆர்.சி. புத்தகத்தை டவுன்லோடு செய்ய பயனர் தங்களது வாகன பதிவு எண் மற்றும் ஓட்டுனர் உரிமம் எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை வைத்திருக்க வேண்டும். இதனால் வழிமுறைகளை பின்பற்றும் முன் இவற்றை கையில் வைத்திருக்க வேண்டும்.
செயலியை டவுன்லோடு செய்வது எப்படி? - கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் சென்று mparivahaan செயலியை தேட வேண்டும். - இனி வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று கோடுகளை க்ளிக் செய்ய வேண்டும். - சைன்-இன் ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களின் மொபைல் நம்பரை பதிவிட வேண்டும். பின் ஸ்மார்ட்போனிற்கு வரும் குறியீட்டு எண்ணை பதிவிட வேண்டும்.
- இவ்வாறு செய்ததும் ஆர்.சி. ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- இனி வாகனத்தின் பதிவு எண் பதிவு செய்து சர்ச் செய்ய வேண்டும்.
- இனி செயலியை வாகன பதிவு எண்ணுடன் கொண்ட விவரங்களை தேடும்.
-அடுத்து Add to dasboard ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். விர்ச்சுவல் டிரைவிங் லைசன்ஸ் டவுன்லோடு செய்வது எப்படி?
- செயலி ஹோம்ஸ்கிரீனில் இருக்கும் ஆர்.சி. டேபை க்ளிக் செய்ய வேண்டும்.
- இனி டிரைவிங் லைசன்ஸ் நம்பரை பதிவிட்டு சர்ச் செய்ய வேண்டும்.
-செயலி டிரைவிங் லைசன்ஸ் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் விவரங்களை தரவிறக்கம் செய்யும். - இறுதியில் Add to dashboard ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
மொபைல் சார்ஜரை வாயில் வைத்த 2 வயதுக் குழந்தைக்கு நேர்ந்த சோகம்.!
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மீரட் பகுதியில் வசிக்கும் ரசியா என்பவற்றின் 2 வயதுக் குழந்தை மொபைல் சார்ஜ்ஜரை வாயில் வைத்து மின்சாரம் தாக்கி உயிர் இழந்துள்ள சம்பவம் அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
2 வயதுக் குழந்தை ரசியா தனது 2 வயதுக் குழந்தையான ஷேஹ்வர் உடன் ஜஹாங்கீரிபாத் பகுதியில் உள்ள அவரின் தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். ரசியா குடும்பத்தைச் சேர்ந்த வீட்டிலிருந்த யாரோ மொபைல் போன்னை சார்ஜிங் செய்துள்ளனர்.
சார்ஜ்ர் பின்னை வாயில் வைத்த குழந்தை சார்ஜரில் இருந்த போனை சார்ஜ் செய்தவுடன் ஸ்விட்சை ஆப் செய்யாமல் போனை மட்டும் எடுத்துள்ளனர். ரசியாவின் இரண்டு வயதுக் குழந்தை விளையாட்டாக மொபைல் சார்ஜ்ர் பின்னை வாயில் வைத்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளது.
வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை தகவல் அறிந்து ஜஹாங்கீரிபாத் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். வழக்குப் பதிவு செய்ய காவல்துறையினர் கேட்டும் குடும்பத்தினர் ஒத்துழைக்காததால் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
பெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு வேண்டுதல் குழந்தைகள் வைத்துள்ள தாய்மார்கள், குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுமாறும், மொபைல் சார்ஜ்ர்கள், பிளக்குகள் போன்ற மின்சார பொருட்கள் அனைத்தையும் குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத விதத்தில் வைத்துக்கொள்ளுமாறுபெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு வேண்டுதல் விடுத்துள்ளனர்.