கீழே இருப்பவை எந்த நாட்டில் புழக்கத்தில் இருந்த பணம் என்று உங்களால் கூற முடியுமா?


இது என்ன பிரமாதம், இது இந்திய தேசத்தின் பணம் என்று கூறுகிறீரா?? அது தான் தவறு. பணத்தின் மதிப்பையும், அதன் நிறத்தையும் பாருங்கள். இந்த பணத்தை யாராவது இந்தியாவில் புழக்கத்தில் இருப்பதை கண்டிருக்கின்றீரா? (குறிப்பாக 1950 மற்றும் 60களில் பிறந்தவர்கள்)
மேலிருக்கும் படத்தில் உள்ள பணம் அரபு நாடுகளுக்காக இந்திய அரசு அச்சிட்ட பணம். Gulf ரூபாய் (வளைகுடா ரூபாய்) என்றழைக்கப்படும் இவை ஒரு காலத்தில் அரபுநாடுகளில் புழக்கத்தில் இருந்தது.
இந்திய ரூபாயின் ஒத்த வடிவமைப்பை வளைகுடா ரூபாய் கொண்டிருந்தாலும், 1 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நோட்டுகள் சிவப்பு நிறத்திலும், 5 ரூபாய் நோட்டுகள் ஆரஞ்சு நிறத்திலும், 100 ரூபாய் நோட்டுகள் பச்சை நிறத்திலும் அச்சிடப்பட்டிருந்தது. மேலும் வளைகுடா பணங்கள் அனைத்தும் Z சீரிஸ் வகைகளாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது, இந்திய ரூபாயில் "பாகிஸ்தான்" என்று முத்திரையிட்டு நமது பணத்தை பாகிஸ்தான் பயன்படுத்தி வந்தது என்பது பலர் அறிந்ததே. அதே வேளையில் யேமென், ஓமான், துபாய், குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு நாடுகள், கென்யா, தன்சானியா, உகாண்டா, செய்செல்லெஸ், மற்றும் மொரிஷியஸ் இந்திய ரூபாயை தனது நாட்டின் அதிகார்வப்பூர்வ நாணயமாக பயன்படுத்தி வந்தது.
தங்கம் கடத்தலில் இருந்து இந்தியாவின் பண கையிருப்பை பாதுகாக்கும் நோக்கில், இந்தியாவுக்கு வெளியே புழங்கும் விதத்தில் 1959-ஆம் ஆண்டில் வளைகுடா ரூபாயை இந்திய அரசு வெளியிட்டது. 1961-ஆம் ஆண்டு குவைத், குவைத் தினாருக்கும், பஹ்ரைன், பஹ்ரைன் தினாருக்கும் மாறியது. 1966ஆம் ஆண்டு வளைகுடா ரூபாயின் மதிப்பை இந்தியா குறைத்து. இதனை தொடர்ந்து ஓமான், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் தத்தமது நாணயங்களை அறிமுகப்படுத்தி வளைகுடா ரூபாய் புழக்கத்திலிருந்து விலகியது.
இன்று நேபாள், பூட்டான் மற்றும் ஜிம்பாப்வே[1] நாடுகள் இந்திய ரூபாய் பரிவர்த்தனையை ஏற்றுக்கொள்கிறது.
அடிக்குறிப்புகள்

0 Post a Comment:

கருத்துரையிடுக

உங்களுடைய கருத்துக்கள் எதுவானாலும் இங்கு பதியவும், அது எங்களின் வலைப்பூ முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.