NASA முதன்முறையாக ஒரு பெண் உட்பட சில மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் விண்கலத்தை வடிவமைப்பதில் உதவுவதற்கு கிட்டத்தட்ட ஒரு டஜன் நிறுவனங்களை தேர்ந்தெடுத்துள்ளது.
அடுத்த ஆறு மாதங்கள் முழுவதும்,ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் துறையில் மிகப்பெரிய நிறுவனங்கள் உள்பட நாசா தேர்ந்தெடுத்துள்ள பங்குதாரர்கள், 2024ம் ஆண்டு வரவிருக்கும் ஆர்டிமிஸ் மிஷனின் பல்வேறு பாகங்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.
'கேட்வே'
இந்த மிஷனின் ஒரு பகுதியாக, சந்திரனை ஆராய்வதற்காக விண்வெளி வீரர்களுக்கு ஒரு வழிவகையாக செயல்படும் 'கேட்வே' என்றழைக்கப்படும் ஒரு விண்வெளி நிலையத்தை கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளது நாசா. இந்த விண்வெளி நிலையத்தின் கட்டுமானப்பணி அடுத்த சில ஆண்டுகளில் தொடங்கி, முழுமையான கட்டமைக்கப்பட்ட பின்னர் சந்திரனின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.
நாசா
நாசா தேர்ந்தெடுத்துள்ள நிறுவனங்கள், ஆர்டிமிஸ் மிஷனின் மூன்று வெவ்வேறு பாகங்களில் கவனம் செலுத்தும். விண்வெளி வீரர்களை கேட்வே மற்றும் சந்திர சுற்றுப்பாதைக்கு இடையில் மாற்ற உதவும் டிரான்ஸ்பர் எலமெண்ட், அதேபோல் நிலவில் இருந்து பூமிக்கு வரவும், இங்கிருந்து நிலவிற்கு செல்ல உதவும் அஸ்சென்ட் மற்றும் டிஸ்சென்ட் எலமெண்ட்களும் இதில் அடக்கம்.
தனியார் துறை
நாசா மற்றும் தனியார் துறை இடையேயான இந்த ஒத்துழைப்பு நாசாவின் விண்வெளி ஆராய்ச்சியில் மட்டும் புதிய மைல்கல்லாக இருக்காமல், அந்நிறுவனம் செயல்படும் முறையிலும் இருக்கும்.
பாரம்பரிய முறைகளில் சவால் விடுக்கிறோம்
"சந்திரனுக்கு திரும்புவதை விரைவுபடுத்துவதற்காக, எங்கள் வணிகத்தைச் செய்வதற்கான பாரம்பரிய முறைகளில் சவால் விடுக்கிறோம். வன்பொருள் மேம்பாடு, செயல்பாடுகள், கொள்முதல், கூட்டு நிறுவனம் ஆகிய அனைத்தையும் மாற்றியமைப்போம்" என்கிறார் நாசாவின் தலைமையகத்தில் ஹீயூமன் லூனார் எக்ஸ்ப்ளோரேசன் ப்ரோகிராம் இயக்குனர் மார்ஷெல் ஸ்மித்.
20 சதவிகிதம் நிதியளிக்க வேண்டும்
"எங்கள் குழு விரைவில் மீண்டும் நிலவிற்கு திரும்புவதற்கு உற்சாகமாக உள்ளது. மற்றும் மனிதர்கள் தரையிறங்கும் அமைப்புகளைப் ஆராய எங்கள் பொதுத்துறை / தனியார் கூட்டணி அந்த செயல்முறையில் ஒரு முக்கியமான படியாகும் " எனவும் ஸ்மித் கூறினார். அனைத்து நிறுவனங்களும் $ 45 மில்லியனுக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியாக செலவினத்தில் குறைந்தபட்சம் 20 சதவிகிதம் நிதியளிக்க வேண்டும். இதன்மூலம் எதிர்கால விண்வெளி பயணங்களில் வரி செலுத்துவோரின் பணம் குறைவாக செலவழிக்கப்படும் என நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நாசா தேர்ந்தெடுத்த நிறுவனங்களின் முழுமையான பட்டியல்
நிலவுக்கு மனிதனை அனுப்பும் அடுத்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நாசா தேர்ந்தெடுத்த நிறுவனங்களின் முழுமையான பட்டியல் கீழே உள்ளது.
ஏரோஜெட் ராக்கெட்டைன்(Aerojet Rocketdyne )
ப்ளூ ஆரிஜின்(Blue Origin)
ஸ்பேஸ்எக்ஸ்(SpaceX)
போயிங்(Boeing)
Dynetics(டைனடிக்ஸ்)
லாக்ஹீட் மார்ட்டின்(Lockheed Martin)
மஸ்டன் ஸ்பேஸ் சிஸ்டம்ஸ்(Masten Space Systems)
Northrop Grumman Innovation Systems(நார்த்ரோப் க்ரூமன் இன்னோவேசன் சிஸ்டம்ஸ்)
ஆர்பிட்பியாண்ட்(OrbitBeyond)
Sierra Nevada Corporation(செய்ரா நெவாடா கார்ப்பரேசன்) எஸ்எஸ்எல்(SSL)
0 Post a Comment:
கருத்துரையிடுக
உங்களுடைய கருத்துக்கள் எதுவானாலும் இங்கு பதியவும், அது எங்களின் வலைப்பூ முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.