பட்ஜெட் விலையில் விவோ வ்யை15 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!


விவோ நிறுவனம் இன்று விவோ வ்யை15 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல்  நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரவிக்க்பபட்டுள்ளது. மேலும் பிளிப்கார்ட், அமேசான் போன்ற முன்னனி ஆன்லைன் தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று விவோ நிறுவனம் சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே: 

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.35-இன்ச் வாட்டர்டிராப் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1544 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சிப்செட்: 

இக்கருவி ஆக்டோ-கோர் மீடியாடெக் பி22 எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதள்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது

கேமரா: 

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ-அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

சேமிப்பு: 

விவோ வ்யை15 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த விவோ வ்யை15 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி-விலை: 

விவோ வ்யை15 சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் உள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை ரூ.13,990-விலையில் வாங்க முடியும்.

0 Post a Comment:

கருத்துரையிடுக

உங்களுடைய கருத்துக்கள் எதுவானாலும் இங்கு பதியவும், அது எங்களின் வலைப்பூ முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.