கடந்த இரண்டு தசாப்தங்களாக மிகப்பெரிய பனிப்பாறைகள் முழுவதும் முன் எப்போதும் இல்லாதவகையில் உருகிவருவதால், தற்போது மேற்கு அண்டார்டிகாவில் உள்ள பனிக்கட்டியில் கிட்டத்தட்ட கால்பகுதி நிலையில்லாமல் இருப்பதாக கருதப்படுகிறது.
1992 ல் இருந்து அனைத்து செயற்கைக்கோள்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 800 மில்லியனுக்கும் அதிகமான அளவீடுகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள், பைன் தீவு மற்றும் ட்வைடிஸ் பனிப்பாறைகள், இந்த ஆய்வுதொடங்கும்போது இருந்த வேகத்தை காட்டிலும் இப்போது ஐந்து மடங்கு வேகமாக உருகிவருவதாக கண்டறிந்துள்ளனர். அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில், பனிக்கட்டிகள் அதிகபட்சமாக 122 மீட்டர் (400 அடி) தடிமனுக்கு உருகியுள்ளால், அவ்வாறு பாதிக்கப்பட்ட பனிப்பாறைகள் நிலையற்றதாக மாறியுள்ளன.
எச்சரிக்கை மணி மேலும் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளின் படி, தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ள பனிப்பாறைகள் உருகுதலின் விளைவாக கடல்மட்டம் உயருதல் போன்றவற்றின் மூலம் கடலோரப் பகுதியில் உள்ள நகரங்களுக்கும் அதிக பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத்திற்கு எச்சரிக்கை மணி அடித்துள்ள இந்த ஜியோபிசிகல் ஆராய்ச்சி முடிவுகள், பெரும்பான்மையான மிகப்பெரிய பனிப்பாறைகள் உட்பட மேற்கு அண்டார்டிகாவில் 24 சதவிகிதத்திற்கு மேற்பட்ட பகுதிகளில் இந்த பனிக்கட்டி உருகுதல் பரவியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பனிக்கட்டிகள் உருகுதல் பனிப்பொழிவால் அதிகரிக்கும் பனிப்பாறைகளின் நிறையை காட்டிலும், பனிக்கட்டிகள் உருகுதல் மற்றும் பனிப்பாறைகள் மிதக்கும் நிகழ்வுகளால் இப்பகுதிகளில் மிகப்பெரிய அளவிலான பனிப்பாறைகள் குறைந்துவருகின்றன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
கிரையோசாட்-2 "அண்டார்டிக்காவின் பல்வேறு பகுதிகளில் பனிப்பாறைகள் அசாதாரண அளவில் உருகிவரும் நிலையில், காலநிலை மாற்றங்கள் மற்றும் வானிலையின் காரணமாக எவ்வளவு தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை எங்கள் ஆராய்ச்சி முடிவுகளில் தெரிவித்துள்ளோம்." என்கிறார் இந்த ஆராய்ச்சி கட்டுரையின் முன்னணி எழுத்தாளர் ஏன்டி ஷெப்பர்ட். 1992 மற்றும் 2017 க்கு இடையில் ஈஆர்எஸ்-1, ஈஆர்எஸ்-2, என்விசாட், மற்றும் கிரையோசாட்-2 ஆகிய செயற்கைகோள்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட பனிப்பாறைகளின் உயரங்கள் மற்றும் ராக்மோ பிராந்திய காலநிலை மாதிரியில் இருந்து பனிப்பொழிவு உருவகப்படுத்துதல்கள் ஆகிய தரவுகளை இக்குழு தங்களது ஆராய்ச்சிக்கு பயன்படுத்தியுள்ளது.
24 சதவிகிதம் குறுகியகால வெப்பநிலை மாற்றம் மற்றும் கடல் வெப்பநிலை அதிகரித்து வரும் நீண்ட கால நிகழ்வுகளிலிருந்து தோன்றிய மாற்றங்கள் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாட்டை அறிந்துகொள்ள இந்த ஆய்வு அனுமதித்தது. பனிப்பொழிவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் சில பகுதிகளில் பனிப்பாறைகளின் உயரத்தில் சிறிய மாற்றங்களுக்கு வழிவகுத்திருந்தாலும், இந்த விளைவுகள் ஒரு சில வருடங்களுக்கு மட்டுமே நீடித்தது. பனிப்பாறைகளின் தடிமனில் ஏற்பட்ட வியத்தகு மாற்றங்கள், மறுபுறம் பல தசாப்தங்களாக மோசமடைந்து அவற்றின் உறுதியற்ற தன்மையை முன்னிலைப்படுத்துகின்றன. மேற்கு அண்டார்டிக்காவில் 24 சதவிகிதம் இப்போது நிலையற்றதாக இருக்கிறது என இக்குழு கண்டறிந்துள்ளது.
பனிப்பொழிவு "பனிப்பொழிவு எந்த அளவிற்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்திருப்பது, செயற்கைக்கோள் பதிவில் உள்ளபோல பனிப்பாறைகளில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய எங்களுக்கு உதவியது "என்று ஷெப்பர்ட் கூறினார். "அண்டார்க்டிக்காவின் மிகவும் பாதிக்கப்படும் பனிப்பாறைகள் சிலவற்றில் பனிக்கட்டிகள் உறுகி விரைவாக பரவி வருவதை இப்போது தெளிவாகக் காண முடிகிறது, மேலும் இதன் இழப்புகள் பூமியை சுற்றியுள்ள கடல் மட்டங்களை உயர்த்துகிறது" என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக கிழக்கு மற்றும் மேற்கு அண்டார்டிக்காவில் ஏற்பட்ட பனிப்பாறை உருகுதல் நிகழ்வு, 1992 க்கு பிறகு உலகளாவிய கடல் மட்ட உயர்வில் 4.6 மிமீ அளவிற்கு பங்களித்திருக்கின்றன.
0 Post a Comment:
கருத்துரையிடுக
உங்களுடைய கருத்துக்கள் எதுவானாலும் இங்கு பதியவும், அது எங்களின் வலைப்பூ முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.