Tech News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tech News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மூன்று கேமராக்களுடன் லெனோவோ இசெட்6 யூத் எடிஷன் அறிமுகம்.!


லெனோவோ நிறுவனம் சீனாவில் புதிய லெனோவோ இசெட்6 யூத் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது.



டிஸ்பிளே:

லெனோவோ இசெட்6 யூத் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடல் 6.3-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு எச்டிஆர் 10 ஆதரவு, பேஸ் அன்லாக் அம்சம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.



கேமரா:

இந்த சாதனத்தின்; பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா + 16எம்பி செகன்டரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. பின்பு 32எம்பி செல்பீ கேமராஇ எல்இடி பிளாஷ்இ ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.



சிப்செட்:

லெனோவோ இசெட்6 யூத் எடிஷன் சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 640ஜிபியுவசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.



பேட்டரி:


லெனோவோ இசெட்6 யூத் எடிஷன் ஸ்மார்ட்போனில் 4050எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைபை, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


5.45-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன்.!


சியோமி நிறுவனத்தின் புதிய விவோ ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் மே 28-ம் தேதி ரெட்மி கே20 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் நிலையில் தனது ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இந்த ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் மாடல் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன்களின் அம்சங்களைப் பார்ப்போம்



டிஸ்பிளே:

ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.45-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1440 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.



சிப்செட்:

இக்கருவி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகள் 710எஸ்ஒசி சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை கொண்டு வருவதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:

ரெட்மி 7ஏ சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரமைரி கேமரா + 5எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமராக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இடம்பெறும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பேட்டரி:


ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 4020எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மூன்று கேமராக்களுடன் விவோ இசெட்5எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!


விவோ நிறுவனம் தனது விவோ இசெட்5எஸ் ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த வடிவமைப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்ப வசதி கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவோ இசெட்5எஸ் சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.



டிஸ்பிளே:

விவோ இசெட்5எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



சேமிப்பு:

விவோ இசெட்5எஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



சிப்செட்:

இக்கருவி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை கொண்டுள்ளதால் இந்த ஸ்மார்ட்போனை இயக்குதவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.



கேமரா:

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைட்-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ-அம்சம் போன்ற பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.



பேட்டரி-விலை: 

விவோ இசெட்5எஸ் சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், வைஃபை, 4ஜி வோல்ட்இ என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். இந்திய மதிப்பில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ இசெட்5எஸ் விலை ரூ.15,000-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ இசெட்5எஸ் விலை ரூ.16,000-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ இசெட்5எஸ் விலை ரூ.18,000-ஆக உள்ளது.


16ஜிபி மெமரி: ரூ.4, 999-விலையில் விற்பனைக்கு வரும் ரெட்மி கோ ஸ்மார்ட்போன்.!



சியோமி நிறுவனம் இதற்குமுன்பு 8ஜிபி மெமரி வசதியுடன் ரெட்மி கோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது, இந்நிலையில் 16ஜிபி மெமரி வசதியுடன் கூடியவிரைவில் ரெட்மி கோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.



டிஸ்பிளே:

சியோமி நிறுவனத்தின் ரெட்மி கோ ஸ்மார்ட்போன் மாடல் 5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1280 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 16:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும்.



சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 குவாட்-கோர் சிப்செட் இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.



கேமரா:

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா வசதி மட்டுமே உள்ளது, அதன்படி 8எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா வசதி கொண்டு ரெட்மி கோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு எல்இடி பிளாஸ் ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



சேமிப்பு:

1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி, விரைவில் 16ஜிபி மெமரி ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும், பின்பு எஸ்.டி கார்டு மூலம் கூடுதல் சேமிப்பு வசதி இவற்றில் உள்ளது என்பது கூடுதல் தகவல்.



பேட்டரி:

ரெட்மி கோ ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.1 போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 8ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.4,499-ஆக உள்ளது.


ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் வாங்க இத உடனே பண்ணுங்க.!




இன்பினிக்ஸ் நிறுவனம் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனம் ஒன்றிணைந்து 5 லக்கி வெற்றியாளருக்கு ரூ.1 விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போனை பரிசளிக்க உள்ளது. இதற்கான கேள்வி பதில் போட்டி 24 மே முதல் துவங்கி 26 மே மாலை வரை நடைபெறுகிறது.





இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் இந்த போட்டியில் பங்குபெற்று, கேட்கப்படும் 5 கேள்விகளுக்கும் சரியாகப் பதில் அளிக்கும் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்து,அவர்களில் 5 நபரைக் குழுக்கள் முறையில் தேர்ந்தெடுத்து இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போனை பரிசாக வழங்கப் போவதாக பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.




2எம்பி செல்பீ கேமரா இந்த ஸ்மார்ட்போன் மாடல் 32எம்பி செல்பீ கேமராவுடன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஆண்டில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அட்டகாசமான ட்ரிபிள் கேமரா ஸ்மார்ட்போன் இந்த இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் என்பதில் சந்தேகமில்லை.




டிஸ்பிளே:

இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.21-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720x1520 பிக்சல் திர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.




சிப்செட்:

இக்கருவி 2ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஹீலியோ பி22 ஆக்டோ-கோர் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பத குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.




கேமரா:

இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, ஏஐ-அம்சம், எல்இடி பிளாஸ், எச்டிஆர் போன்ற பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளது.




பேட்டரி & விலை:


இன்பினிக்ஸ் எஸ்4 சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி போர்ட், வைஃபை 801.11, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது.