லெனோவோ நிறுவனம் சீனாவில் புதிய
லெனோவோ இசெட்6 யூத் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும்
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக்
கொண்டுள்ளது.
டிஸ்பிளே:
லெனோவோ இசெட்6 யூத் எடிஷன் ஸ்மார்ட்போன்
மாடல் 6.3-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு எச்டிஆர்
10 ஆதரவு, பேஸ் அன்லாக் அம்சம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் கொண்டு இந்த சாதனம்
வெளிவந்துள்ளது.
கேமரா:
இந்த சாதனத்தின்; பின்புறம்
16எம்பி பிரைமரி கேமரா + 16எம்பி செகன்டரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்
+ 5எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. பின்பு 32எம்பி செல்பீ
கேமராஇ எல்இடி பிளாஷ்இ ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
சிப்செட்:
லெனோவோ இசெட்6 யூத் எடிஷன் சாதனத்தில்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 855எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 640ஜிபியுவசதி இடம்பெற்றுள்ளது,
பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும்.
பேட்டரி:
லெனோவோ இசெட்6 யூத் எடிஷன் ஸ்மார்ட்போனில்
4050எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைபை, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட்இ,
ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற
பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
0 Post a Comment:
கருத்துரையிடுக
உங்களுடைய கருத்துக்கள் எதுவானாலும் இங்கு பதியவும், அது எங்களின் வலைப்பூ முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.