5.45-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன்.!


சியோமி நிறுவனத்தின் புதிய விவோ ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் மே 28-ம் தேதி ரெட்மி கே20 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் நிலையில் தனது ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இந்த ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் மாடல் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன்களின் அம்சங்களைப் பார்ப்போம்



டிஸ்பிளே:

ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.45-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1440 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.



சிப்செட்:

இக்கருவி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகள் 710எஸ்ஒசி சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை கொண்டு வருவதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:

ரெட்மி 7ஏ சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரமைரி கேமரா + 5எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமராக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இடம்பெறும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பேட்டரி:


ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 4020எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 Post a Comment:

கருத்துரையிடுக

உங்களுடைய கருத்துக்கள் எதுவானாலும் இங்கு பதியவும், அது எங்களின் வலைப்பூ முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.