டாப் 10 பட்டியலில் சுந்தர்பிச்சைக்கு இடம் மறுப்பு: கிளம்பியது புதிய சர்ச்சை.!


பன்னிரண்டு மாதங்கள் என்பது எந்தவொரு தரத்திலும் நீண்ட காலமாக இருக்கிறது, ஆனால் நீங்கள் தொழில்நுட்ப உலகில் இருந்தால், அது வாழ்நாள் போல தோன்றலாம். அதை விட மேலாக நீங்கள் உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்தால், அந்த 12 மாதங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்படக்கூடும். 

ராயல் டச் ஷெல் 

அதுபோல கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை , 2018 ஆம் ஆண்டின் உலகின் மிகவும் புகழ்பெற்ற சி.ஈ.ஓ என அறிவிக்கப்பட்டார்.ஆனால் 12 மாதங்கள் கழித்து அவர் டாப்10 பட்டியலில் கூட இல்லை. ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, புகழ் அளவீடு மற்றும் மேலாண்மை சேவைகளில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனமான 'ரெபுடேசன் இன்ஸ்ட்யூட்", உலகின் 10 புகழ்பெற்ற சி.ஈ.ஓ களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ராயல் டச் ஷெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பென் வான் பெர்டன் முதலிடம் வகிக்கிறார்.

சுந்தர் பிச்சை 

அந்த அறிக்கையின்படி, சுந்தர் பிச்சை மட்டுமே அந்த பட்டியலில் இடம்பெறாத தொழில்நுட்ப நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி அல்ல. கடந்த ஆண்டு டாப் 10 பட்டியலில் இருந்த "லிங்கிடு இன்" தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் வீனெர்-க்கும் இந்தாண்டு பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. ஒட்டுமொத்தமாக 2018ல் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றிருந்த 8 சி.ஈ.ஓ-கள் இந்தாண்டு பட்டியலில் இடம்பெறவில்லை.

கூகுள் நிறுவனம் 

சுந்தர் பிச்சையை பொறுத்தமட்டில் ஃபோர்ப்ஸ் அறிக்கை கூறுவது என்னவெனில், "நிறுவனத்தின் பாலியல் குற்றச்சாட்டுக்களைக் கையாளுதலில் ஏற்பட்ட சர்ச்சைகள்" மற்றும் ஒரு சில தரவு விதிமீறல்கள் போன்ற சில சிக்கல்களில் கூகுள் நிறுவனம் மற்றும் சுந்தர் பிச்சை கடந்த ஒரு வருடமாக விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர் மற்றும் அதன் காரணமாக கூகுள் பிளஸ் செயலியும் மூடப்படுகிறது.

இன்ஸ்ட்யூட் அறிக்கை 

சுந்தர் பிச்சை புகழ்பெற்ற தலைமை நிர்வாக அதிகாரி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது பற்றி ரெபுடேசன் இன்ஸ்ட்யூட் அறிக்கை கூறியதாவது "சுந்தர் பிச்சையின் தாழ்மையான நடத்தை மற்றும் ஈகோ இல்லாத தலைமை பண்பு போன்றவை கவர்ந்திழுக்கும் சி.ஈ.ஓவாக காண்பித்து மற்றவர்கள் அவரை பின்பற்ற வைத்தது மட்டுமின்றி, 2018இன் மிகவும் புகழ்பெற்ற தலைமை நிர்வாக அதிகாரியாக மாற்றியது. பிச்சை வலுவான தலைமை என்ற தோற்றத்தையும், தெளிவான மூலோபாய பார்வை மற்றும் எதிர்பார்க்கும் மாற்றத்தை திறமையாக வழங்குபவர் என உணரப்பட்டார்"

#1லிருந்து # 88ஆக வீழ்ச்சியடைந்தது. 

2019 ஆம் ஆண்டிற்கு வேகமாக முன்னேறி பார்த்தால், சுந்தர் பிச்சை முன்னர் சிறந்து விளங்கிய பகுதிகளில் தான் அவரது வீழ்ச்சியே. சுந்தரின் தலைமை பண்பு கேள்விக்குள்ளானது மற்றும் கூகுளின் நியாயமற்ற நடவடிக்கைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த ஒரு கொந்தளிப்பான ஆண்டுக்கு பிறகு, 6.5 புள்ளிகள் குறைந்தது. தலைமைத்துவத்தின் வீழ்ச்சியின் காரணமாக, ஒட்டுமொத்தமாக 8.4புள்ளிகள் குறைந்து சுந்தர் பிச்சையின் புகழ் #1லிருந்து # 88ஆக வீழ்ச்சியடைந்தது.

10% பொதுமக்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் 

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, ரிபுடேசன் இன்ஸ்ட்யூட் நிறுவனம் தலைமை நிர்வாக அதிகாரிகளின் புகழ் பற்றிய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலை நிர்ணயிக்கும் முறை குறித்து விவரிக்கையில்," 2019 ஜனவரி முதல் பிப்ரவரி வரையிலான காலப்பகுதியில் 14 நாடுகளில் 230,000 க்கும் மேற்பட்ட தனிநபர்களிடம் கருத்துகணிப்பு நடத்தப்பட்டது. மொத்த மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 50% பேருக்கு தெரிந்திருந்த பிரபல நிறுவனங்களின் அனைத்து 140 சிஈஓகளும் கருத்தில்கொள்ளப்பட்டனர்.அந்த சிஈஓ க்கள் குறைந்தபட்சம் 10% பொதுமக்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். "


0 Post a Comment:

கருத்துரையிடுக

உங்களுடைய கருத்துக்கள் எதுவானாலும் இங்கு பதியவும், அது எங்களின் வலைப்பூ முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.