அதிர வைக்கும் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் புதிய ரீசார்ஜ் திட்டம்.!


ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிய பரிமாணத்தில் உருவெடுத்துள்ளது. இந்நிலையில் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் ரீசார்ஜ் பிளான்களை அறிவித்துள்ளது. இதில் பிரீப்பெய்டு மற்றும் போஸ்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற திட்டங்கள் இதில், அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் நாம் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட்டை ரூ.1500 செலுத்தி வாங்க வேண்டும். பிறகு மாத வாடகையாக ரூ. 399 செலுத்த வேண்டும். இதில் சிறந்த டேட்டா பிளானும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்ட்பெய்டு ரூ.499 திட்டம்: 



ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட்டில் ரூ.499க்கு போஸ்ட்பெய்டு திட்டம் அறிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மாதத்திற்கு 75ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடயிம். பிறகு இதன் வேகம் 80கேபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

ப்ரீபெய்டு திட்டம் : 



இந்த திட்டத்தின் மாத வாடகை ரூ.399 ஆகும். இதில் 1.5ஜிபியை 84 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது. நாம் அதிகமாக பயன்படுத்தி விட்டால் வேகத்த 80கேபிபிஎஸ் ஆகு குறைப்படுகின்றது. நீங்கள் டேட்டாவை பயன்படுத்தாமல் இருந்தால், அடுத்த மாதத்தோடு சேர்த்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

10 சாதனத்தில் பயன்படுத்தலாம்: 



இந்த ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ் பாட்டை ஓரே நேரத்தில் 10 சாதனத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், லேப்டாப், மொபைல்கள், டேப்லெட்கள், ஸ்மார்ட் டிவிக்ள், சிசிடிவி, ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட 10 சாதனங்களில் ஓரே நேரத்தில் பயன்ழுடுத்திக் கொள்ளலாம்.

4ஜி/3ஜி பயன்பாடு : 



இந்த ஏர்டெல் ஹாட்ஸ் பாட் சாதனம் ஓரே வெப்பம் அதிகரிக்காமல் குளிர்ச்சிதரக்கடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டேட்டாவை 4ஜியில் பயன்படுத்திக் கொள்ள முடியும். 4ஜி நெட்வோர் கிடைக்காத பட்சத்தில் தானகவே 3ஜி நெட்வொர்காக மாறிவிடும்.

1500 எம்ஏஹெச் பேட்டரி: 



இந்த ஹாட்ஸ்பாட் 6 மணி நேரம் தாக்க கூடிய வகையில், 1500 எம்ஏஹெச் பேட்டரியை வழங்கியுள்ளது. டேட்டா சேவையை மோடத்தின் வாயிலாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.


0 Post a Comment:

கருத்துரையிடுக

உங்களுடைய கருத்துக்கள் எதுவானாலும் இங்கு பதியவும், அது எங்களின் வலைப்பூ முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.