தெறிக்கவிடும் ரியல்மி: இந்தாண்டில் 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம்.!

ஓப்போ மற்றும் ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்களின் 5 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ள நிலையில், ரியல்மி தனது 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிடுவது குறித்து அறிவித்துள்ளது.


ஓப்போ நிறுவனத்தின் ரியல்மி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. தற்போது, 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதால், இந்த போன் பிரியர்கள் மகிவும் குஷியாகிவிட்டனர்.

5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: சர்வதேச சந்தையில் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என ரியல்மி இந்தியா தலைமை செயல் அதிகாரி மாதவ் சேவ் தெரிவித்தார். ரியல்மி நிறுவனர் ஸ்கை லீ உடனான சந்திப்புக்கு பின் மாதவ் இந்த அறிவிப்பை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

5ஜி சோதனை துவக்கம்: ரியல்மி தனது 5ஜி ஸ்மார்ட்போனின் சோதனையை துவங்கி இருக்கின்றது. இதனை உறுதி செய்யும் வகையில் ரியல்மி நிறுவனர் மற்றும் இந்திய தலைமை செயல் அதிகாரி என இருவரும் கையில் போனினை வைத்திருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

மாடல்கள் அறிமுகம்: இதுதவிர ரியல்மி விரைவில் தனது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், ஸ்னாப்டிராகன், எக்ஸ் 50 5ஜி மோடெம் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றத. புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ரியல்மி எக்ஸ் ப்ரோ என்ற பெயரில் அறிமுகமாகும் எனத் தெரிகின்றது.

பாப்-அப் கேமரா அறிமுகம்: இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் பாப்-அப் கேமரா வடிவமைப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது. ரியல்மி புதிய 5ஜி ஸ்மார்ட்போன் பற்றி விரவங்கள் வரும் மாதத்தில் வெளியாகும் என்று தெரிகின்றது.

0 Post a Comment:

கருத்துரையிடுக

உங்களுடைய கருத்துக்கள் எதுவானாலும் இங்கு பதியவும், அது எங்களின் வலைப்பூ முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.