இந்த மாதம் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது தரமான ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாதம் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்களின் விரிவான தகவல்களைப் பார்ப்போம்.
அசுஸ் சென்போன் 6: அசுஸ் நிறுவனத்தின் சென்போன் 6 மாடல் வரும் ஜீன் 19-ம் தேதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 2340 x 1080 பிக்சல் திர்மானம் அடைப்படையில் வெளவரும். பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் போன்றவை இவற்றுள் அடக்கம். குறிப்பாக 48எம்பி பிரைமரி கேமரா மற்றும் 13எம்பி செகன்டரி கேமரா அடிப்டையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
நுபியா ரெட் மேஜிக் 3 : இந்த ஜீன் மாதம் இறுதியில் நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நுபியா ரெட் மேஜிக் 3 கேமிங் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.65-இன்ச் முழு எப்எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2160 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவுடன் வெளிவரும். இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் அடக்கம். நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனில் 48எம்பி ரியர் கேமரா மற்றும் 16எம்பி செல்பீ கேமரா இடமபெற்றுள்ளது. நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128/253ஜிபி மெமரியைக் கொண்டு வெளிவரும்.
சாம்சங் கேலக்ஸிஏ80: சாம்சங் கேலக்ஸிஏ80 ஸ்மார்ட்போன் மாடல் வரும்; 10-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.7-இன்ச் டிஸ்பிளே மற்றும் 1080பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவரும். குறிப்பாக சூழலும் கேமரா இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது, அதன்படி 48எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி டெப்த் கேமரா கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆக்டோ-கோர் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி என பல்வேறு அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3700எம்ஏச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
சாம்சங் கேலக்ஸி ஏ40: சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் மாடல் இந்த மாதம் 11-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.20,000-விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 32எம்பி செல்பீ கேம் மற்றும் ஒஎலஇடி டிஸ்பிளே போன்ற அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
நோக்கியா 9 பியூர் வியூ: இந்த மாதம் இறுதியில் நோக்கியா 9 பியூர் வியூ சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 5கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 5.99-இன்ச் டிஸ்பிளே மற்றும் 2160 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் ஆண்;ராய்டு இயங்குளம், 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, 3320எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹானர் 20: ஹானர் 20 ஸ்மார்ட்போன் வரும் ஜீன் 11-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 6.26-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 1080பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவரும். குறிப்பாக ஆகடோ-கோர் கிரிண் 980 சிப்செட், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், 6ஜிபி ரேம்,128ஜிபி மெமரி, 3750எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா 10 16எம்பி செகன்டரி கேமரா 10 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
ஹானர் 20 ப்ரோ: ஹானர் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் இந்த மாதம் இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் 6.26-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் 1080பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவரும்.பின்பு கிரிண் 980 சிப்செட், 8ஜிபி ரேம்,256ஜிபி மெமரி, 4000எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா+ 16எம்பி வைட் ஆங்கிள் கேமரா + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
மோட்டோரோலா ஒன் விஷன்: மோட்டோரோலா ஒன் விஷன் வரும் ஜீன் 19-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் மாடல் 6.3-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், இக்கருவி 2.2ஜிகாஹெர்ட்ஸ் அக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9609 எஸ்ஒசி பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பரைமரி சென்சார் + 5எம்பி இரண்டாவது பிரைமரி சென்சார் என் இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 25எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ்இ செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளதுஇ பின்பு 4ஜி வோல்ட்இ,வைபை, ப்ளூடூத்,யு.எஸ்.பி. டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக், டூயல் மைக்ரோபோன் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்ள அடக்கம். ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது.
போகோ எப்2: அன்மையில் சீனாவில் ரெட்மி கே20 மற்றும் கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் போக்போ எப்2 மற்றும் போகோ எப்2 ப்ரோ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இந்த மாதம் இறுதியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Post a Comment:
கருத்துரையிடுக
உங்களுடைய கருத்துக்கள் எதுவானாலும் இங்கு பதியவும், அது எங்களின் வலைப்பூ முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.