சீனாவின் கழுத்தை நெறித்த அமெரிக்கா: கடைசியில் டிரம்பிடம் அடிபணிந்தது.!

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் நடந்து வந்தது. இதனால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்காவில் இரட்டை வரி விதிப்பு வதிக்கப்பட்டது. தொடர்ந்து சீனாவும் அமெரிக்காவின் பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தியது.

இதனால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் வர்த்தப்போர் பெரும் பூகப்பம் போல மாறியது. இது உலக நாடுகளையும் அதிர வைத்தது.
பிறகு சீனாவின் ஹுவாய் நிறுவனத்தின் மீதும் டிரம்ப் 2முறை தாக்குதலை தொடர்ந்தார்.
ஹூவாய் நிறுவனத்தின் மீது சட்ட விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டது. மேலும் அமெரிக்காவின் தீவிர அழுத்தம் காரணமாக சீனா நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வர்த்தக போரை விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது.

ஹூவாய் மீது 2 தாக்குதல்:

சிறப்பு அனுமதி பெறாமல் அமெரிக்க தொழில்நுட்பங்களை வாங்க தடை, அமெரிக்க தொலைத்தொடர்பு நெட்ஒர்க்குகளில் தயாரிப்புகளை பயன்படுத்த தடை என, சீன நிறுவனமான ஹுவாய் மீது அதிபர் டிரம்ப் ஒரேநேரத்தில் இரட்டைத் தாக்குதலை தொடுத்துள்ளார்.

ராணுவ ரகசியம் கசியும் அச்சம்:

சீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், தொலைத்தொடர்பு நெட்ஒர்க்குகள் வழியாக ஊடுருவி அரசு, ராணுவம் மற்றும் நிறுவனங்களின் தகவல் தொடர்புகள் சீனாவால் இடைமறிக்கப்படலாம் என்ற அச்சம் அமெரிக்காவில் நிலவுகிறது.


கருவிகள் வாங்க தடை:

இந்நிலையில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் தொலைத்தொடர்பு கருவிகளை அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில், தேசிய நெருக்கடி நிலையை அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார்.

ஹூவாய்-70 நிறுவனங்களுக்கு தடை:

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன், ஹூவாய் மற்றும் அதோடு தொடர்புடைய 70 நிறுவனங்களை அதற்கான பட்டியலில் அமெரிக்க வர்த்தக துறை இணைத்துள்ளது.


அரசின் சிறப்பு அனுமதி வேண்டும்:

இதன் மூலம், அமெரிக்க அரசின் சிறப்பு அனுமதியைப் பெறாமல், ஹூவாய் நிறுவனம் அமெரிக்க தொழில்நுட்பங்கள், கருவிகள், பாகங்களை வாங்குவதை தடை செய்யப்பட்டுள்ளது.


டிரம்ப் ஜின் பிங் சந்திப்பு:

தீர்வுகாணும் விதமாக கடந்த ஆண்டு இறுதியில் அர்ஜென்டினாவில் நடந்த ஜி-20 மாநாட்டின் இடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் இரு நாடுகள் இடையிலான வர்த்தகப்போரை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்திவைத்து, பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இரு தரப்பு வர்த்தக பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் இன்றி முடிவுக்கு வந்தது.


கடும் வரி விதிப்பு:


கடும் வரி விதிப்பு:

இதனால் அதிருப்தி அடைந்த டிரம்ப், 200 பில்லியன் டாலர் மதிப்புடைய சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வரும் 10 சதவீத வரியை 25 சதவீதமாக உயர்த்தினார். இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீதான, இறக்குமதி வரியை 25 சதவீதமாக உயர்த்தி உள்ளது.
இந்த நிலையில் வர்த்தகப்போர் தொடர்பாக சீன அரசு நேற்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அதில், வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததற்கு அமெரிக்கா தான் காரணம் என தெரிவித்துள்ளது. வெள்ளை அறிக்கையில் கூறியுள்ளது.


வர்த்த போரை விரும்பாத சீனா:

சீனா வர்த்தகப்போரில் ஈடுபடவிரும்பவில்லை. அதே சமயம் வர்த்தகப்போருக்கு சீனா பயப்படாது. வர்த்தகப்போர் நிச்சயமாக தேவைப்படும்
பட்சத்தில் சீனா தனது அணுகுமுறையை மாற்றி கொள்ளாது. எந்த பிரச்சினை வந்தாலும் சீனா ஒருபோதும் தனது முக்கிய கொள்கைகளை விட்டுக்கொடுக்காது.


டிரம்ப் கொடுத்த அழுத்தம்:

அமெரிக்காவின் உயர்மட்ட கோரிக்கைகள் சீனாவின் இறையாண்மையில் தலையீடுவதாக உள்ளது.
ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம், சீனா மீது அதிக அழுத்தம் கொடுப்பதன் மூலம், வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததற்கும், இருநாட்டின் தற்போதைய உறவு நிலைக்கும் யார் காரணம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.


சீனாவின் அரை கூவல்:

தீவிர அழுத்தத்தை கொடுப்பதன் மூலமும் அனைத்து வழிகளில் வர்த்தக பிரச்னையை ஏற்படுத்துவதன் மூலமும் சீனாவை சரணடைய வைத்து விடலாம் என அமெரிக்கா கருதினால், அது கனவிலும் சாத்தியமற்றதாகும். இவ்வாறு வெள்ளை அறிக்கையில் கூறியுள்ளது.


0 Post a Comment:

கருத்துரையிடுக

உங்களுடைய கருத்துக்கள் எதுவானாலும் இங்கு பதியவும், அது எங்களின் வலைப்பூ முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.